Thursday, April 15, 2010

கன்தெனியவும்... அட்டகாசமும்(அட்டைகளின்)

நான் சொல்வது எல்லாம் உண்மை உண்மைய தவிர இங்க நான் பிள்டப் பண்ணல... பண்ணல.. பண்ணல...  என்டா மட்டும் நீங்க என்ன நம்பவா போறீங்க.. ஆனா.. இது உண்மை....


அன்று .... நான் வழமைக்கு மாறாக காலை 3.30 க்கே எழும்பிட்டன்.. வழமையா நான் நித்திரைக்கு போறதே அந்த நேரம் தான்........ நானாவது பருவால.. நம்மட ரூம் மேட் அண்டைக்கு படுக்கவே இல்ல... என்னடா புலி புண்ணாக்க திண்ணுற மாதிரி இருக்கா ???  ஆமாங்க.. இனி எல்லாம் இப்பிடிதான்..(நாயகர் பட ஸ்டைலில்...)

எங்கட யுனிவர்சிட்டி இல.. எது எப்புடி எப்ப செய்வாங்க என்டு.... கடவுளுக்கே தெரியாது.. ஏனென்டால் அவர்களின் முடிவு எப்ப மாறும் என்டு... அவங்களுக்கே தெரியாது....அப்படி ஒரு முடிவுதான் இந்த சுற்றுலா என்டு சொன்னாங்கள்.. ..
                                          நம்மட பொடியங்கள் பட்டிகாட்டான் முட்டாசு கடைய பாக்க போற போல..... செம குஷி..... சுற்றுலா போறோமோ இல்லயோ.. தமிழ் ஆக்கள் எல்லாம் சேர்ந்து பஜாரா சேர்ந்து போவம் என்டு முடிவு எடுத்தாங்கள்... அதுல...கிட்டத்தட்ட 30 பேர் தமிழ் இருக்கும்... வந்து சேந்தாங்கள்....
காலையில 4 மணிக்கு புறப்படுற என்டு பிளானிங்.... எதையும் பிளான் பண்ணாம செய்யப்படாது... என்ட தத்துவம் இவங்களுக்கு விளங்கி இருக்கு..(வடிவேல் எப்ப சிங்கள படத்துல நடிச்சேர் என்டு தான் எனக்கு விளங்கல) ஆனா நாங்க எங்க சொன்ன நேரத்துக்கு கிளம்பி இருக்கம்.... . எனக்கு அப்பவே தெரியும் இவங்க 4 மணி என்டா 6 மணிதான் என்டு...சரி பாவி பயலுக... என்ன செய்ற... தலையோட சேர்ந்து வாலும் ஆடதானே வேணும்.... இல்ல என்டுவிட்டுட்டா வரமுடியும்.. இதுக்குல தாங்கள் வீட்ட இருந்து வரக்குலய போட்டே எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.. நம்ம இடியமீனும் பாலக்குட்டியும் ....... போட்ட எடுக் இடம் இல்ல என்டு Galle Rd ல படுத்து கிடந்து... ஏதோ இரண்டு ட்ரக்ல லாறி பிரேக் டவுன் ஆன மாதிரி.....








டூர் போகக்குள்ள பாட்டு படிச்சு பம்மலா போற சகஜம் தானே... சி னா பொடியல் பாட்ட தொடங்கினாங்.... நாங்க என்ன அவங்களோட சேர்ந்து பாடவா முடியும்...நாங்க என்னத்த பெரிசா செய்யப்போறம்... என்ன எங்களால முடிஞ்ச உதவி.... என்ன செய்ற நாய் வேசம் போட்டா குலைச்சுதானே ஆகனும் கைதட்டினோம்.( எங்களால கைதட்டல் தான் வாங்க முடியல.. கையாவது தட்டுவம் என்டுதான்)



சி னாக்கு த னா தெரியா என்ட நம்பிக்கயில.. வாயில வந்த வார்த்தயெல்லாம் போட்டு நாங்களும் பாட்டு படிச்சம்......நாங்க ரொம்ப நல்லவங்க..... டூருக்கு பிறகு கெட்டவங்களாகிட்டம் என்டு நினைக்கிறன்...
மட்ட பஸ்ல என்ன கதைபோன என்டு எனக்கு தெரியாது... ஏன் என்டா 
எனக்கு உண்மையா தெரியாது.......
 சரி விடுங்க..... எவ்வளவு காலம் தான் பஸ்ல யே இருக்கிற.... இடைக்கிடையில பஸ் நிக்கிறதும்.. நாங்க இறங்கி தள்ளுறதும் என்டு 2 , 3 தடவை நடந்துச்சு... அப்பிடி இப்பிடி என்டு கன்தெனியா காட்டுக்கு வந்துட்டம்.....
அங்க போனா அங்க கயிடு தெரியுமா கயிடு.... அதாங்க.. இடமெல்லாம் சுத்தி காட்டுவாங்களே....
காட்டுக்கு போகமுதல் எங்களுக்கு மீட்டிங் போட்டாங்க... என்னன்டா காட்டுக்குள்ள பாம்பு, அட்டை,பூச்சி,எல்லாம் இருக்காமாம். கவனமாமாம்....
அதுக்கு பிறகு, சித்தாலேப்பே தந்தாங்க.... கால் , கை எல்லாம் பூசட்டாம்.. அட்டைக்கும் சித்தாலேப்பேக்கும் ஒத்துவராதாம் என்ன ஜென்ம பகையோ தெரியல.. ..அதான்பா தந்தாங்க..
நம்மட பொடியலும் ஓசி என்ட உடனே.. ஏதோ பண்ணிக்குட்டிகள் புண்ணாக்குக்கு அடிபடுற மாதிரி... சித்தாலப்பேக்கு அடிபட்டாங்க என்டா பாத்துக்குங்களேன்.....
அடி பட்டு இடிபட்டு கைகால் எல்லாம் அள்ளி அள்ளி பூசினவங்க.. கொஞ்சநேரத்துல அம்மா உம்மா என்டு மண்ணென்ணெய் பட்ட பாம்பு போல அங்க இங்க என்டு... கிளம்பி திரிஞ்சாங்க. (என்னடா இவன் எதுக்கு எடுத்தாலும் மிருகங்களோடவே எங்கள ஒப்புடுறான் என்டு பாக்கிறீங்களா.. என் செய்றது ...பூனையையும் புலியையும் ஒன்டு என்டு பொய் சொல்லலாம்.. அதுக்கு எலிதான் புலி என்டா... என்னை மட்டவங்க அடிக்க வருவாங்களால இல்லயா... நீங்களே சொல்லுங்க... பொய் சொன்னாலும் பொருந்ததான் சொல்ல வேணாம்.. அட்லீஸ் கேக்கிற மாதரியாவது இருக்கதானே வேணும்.. என்ன நான் சொல்றது....)
சரி அதுக்கு பிறகு 5 குருப்பா பிரிஞ்சு மலை மலையா..... காடு காடா திரிஞ்சம்....மூஞ்சூருக்கு தான் ஓட்டைக்குள போகவே வழி இல்லயாம் அதுக்குள்ள விளக்குமாத்தையும் இழுத்துட்டு போன கதையா.. நம்மட பொடியல் தாங்கள் பாதுகாப்பா போக வழியில்ல அதுக்குள்ள நம்மட பொம்பள பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேற வழங்கனும் என்டு ( அவங்கட்ட இருந்து நாம முதல்ல நம்மல காப்பத்தனும் என்டு சொல்லவா முடியும்..... இத ரகசியம் .. யாரிட்டயும் சொல்லாதீங்க.. அதான் Hide  பண்ணிருக்கன்) 
இனி எங்கட அட்டைப்படலம் தொடருது.... (என்னடா மகாபாரதத்துல வர்ற மாதிரி படலம் எல்லாம் வருது.. என்டு பாக்கிறீங்களா ?? நம்மட கதையோட ஹீரோ அட்ட தாங்க....)

அதுக்குள்ள நம்மட கட்டை ... அட்டை பெரிசா... இல்ல தான் பெரிசா என்டு சண்டை...முடிவா வென்றது அட்டை... 
அட்டைய.. குட்டையில... மர பட்டையில.....ஏன் அவங்களுக்கு கிட்ட எல்லாம் தேடினாங்க.... ஆனா அவங்க மொட்டயிலயும் சொட்டயிலயும் இருக்கா என்டு பாக்க மறந்துட்டாங்க... அவங்க மொட்டயில இடிவிழுந்தாலும் சறுக்கி விழுந்திடும்... அட்டையால நிக்க முடியுமா என்ன....
என்னதான் இருந்தாலும் அட்டை சிலபேரின் ரத்தத்தை பதம் பார்க்க மறக்கல்ல...
அதிலும் சிலபேர் தங்கள் இங்கிலிசையும் மறக்கல... அட்ட கடிச்ச நேரத்துல.."Please take it !!"  என்று ஆங்கிலத்தில் (அட்டைக்கு இங்கிலிசு தெரியுமா.. தமிழ் தெரியுமா.. சி னா தெரியுமா இல்ல அது மனுசன் என்டுதான் தெரியுமா.. அது பிடிச்சா சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்டு இரத்தத்த குடிச்சுட்டு போகுமப்பா (வடிவேலின் பாணியில்)) ஆபத்தை விளக்கிய பெண்களும்.அதுலயும் ஒரு அறிக்கை.. வெள்ளக்காலுக்கு அட்ட கடிக்காதாம்.. இந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது...இதுக்கு எங்காவது லாயிக் இருக்காங்க .. நீங்களே சொல்லுங்க....இவங்க எல்லாம் எங்கள் கம்பசில் படிக்கிறார்கள் என்பதை நினைக்ககுள்ள.. எனக்கு புல்லரிக்கிறது...


அதிலும் இன்னொருவ... ஆங்கில மேதை..... அட்டை கடிச்சதுக்கு.. பக்கத்துல கிடந்தவனங்களெல்லாம் ஆட்டம் போட்டு பயமுறுத்தினவ....
ஆம் அவரை பற்றி சொல்லனும் என்டா..அவ எங்கட கொட கண்டின் ல சாப்பிடுறதே இல்ல..ஏன் என்டா டயட்டாம்.....
இன்னொருந்தர் தனது வீராப்பு காரணமாக கன்தெனியாவின் மண்ணுக்கு விழுந்து வணக்கம் போட்டவ.ஏன் என்டா தனக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி.. நல்ல காலம் தொப்பென்று விழுறது. மெத்தயில தவழுற மாதிரி என்டு சொல்லல... . ஆமாங்க..... ஆறு ஒன்றை கடக்கும் பாதையில் கற்கள் நிலையில்லை என்று யான் எடுத்து கூறியும்..சானியா மிர்ஷா  எனும் நினைப்பில் கால் எடுத்து வைக்க... கல் கவுல... அவ ஆற்றுநீரை மொல மொல என்டு குடிச்சா பாருங்க.. அந்த ஸ்டைல் இருக்கே..... அப்பப்பா..... அதுல அவட கால் வேற 30 Hz இல் வைபிரேஷன் பண்ணுது... ம்... இதான் சொல்றது.. பெரியவங்க சொன்னா கேட்கனும் என்டு...
இனி.... அட்டை அடேக் பண்ணிணவங்கள பாப்பம்..... சிலர் அட்டையயும் அடேக் பண்ணினாங்க..
அதுல முதல் இடம் பெறுபவர் எங்கள் கள்ளச்சிரிப்ழகர் விளையாட்டு வீரர்....
அவர் போன பிறப்புல என்ன பாவம் செய்தாரோ தெரியல...அட்டைக்கும் அவருக்கும் அப்பிடி ஒரு பாசபிணைப்பு...அட்டை அவர விட்ட பாடு இல்ல... அவன்ட காலில ஏறின பாடுதான்.. அவனும் அத தட்டுறதும் .. பிறகு.. அட்ட ஏறுறதும்.... இப்பிடி 7 ,8 தரம்..அட்டைய துாக்கி மெத்தயில விட்டாலும் அது குப்பையில போய்தான் அது இருக்கும் என்டுறவங்க.. அதுக்கு இவன் என்ன குப்பைப்பயலா ??? அவனுக்கு அழுத்து போய்.. சரி வந்தனி ரத்தத்தை குடிச்சுட்டு போ..... என்டு விடாத குறை...



நெக்ஸ்ட்டு Mr. Bruce  என்டு தன்னை தானே சொல்றவர்...
அவருக்கு அட்ட பாரபட்சம் எல்லாம் பாக்கல.. அட்ட அவர கடிக்க... அவர் அட்டைட்ட கடி வாங்க... பிறகு அட்ட அவர கடிக்க.. அவர் அட்டைட்ட கடிவாங்க.... இப்பிடியே .......... (நான் என்ன கதையா சொல்லுறன்.... இரண்டும் ஒன்டுதான்....) அவர் கடிவாங்கி இரத்தம் குடுத்த பெறுமைய நான் என்ன என்டு சொல்ல.... அதுலயும் அவருக்கு ரணகலத்துலயும் ஒரு கிலுகிலுப்பு .. தான் ரத்தம் குடுத்த இடத்த.. போட்டோ எடுத்து .. பேஸ் புக்ல பொபுலர் ஆக படத்த போட்டு... ரத்தகளரி என்டு தலையங்கம் வேற... எப்புடித்தான் யோசிக்கிறாங்களோ தெரியல...சும்மா கிளப்புறாங்கப்பா பீதிய...

நம்மட மாரன்(“மா” க்கு பக்கத்துல “க” வை சேத்து கொள்ளுங்க..) அட்டையோட தான் ஒரு படம் எடுக்கோணும் எண்டு ஒரே பிடிவாதம்... அது என்னடா உன்ட மாமனா மச்சானா.... பிடிச்சா.. ரத்தத்தை குடிக்கும் என்டா.. தானும் குடிக்கிறவனாம்.. ரத்தத்தை இல்ல.... என்டு ஒரே ஆட்டம் தாங்க முடியாம.. படம் எடுத்தாச்சு...


அதுக்குள்ள ஒருவன் அங்க இங்க என்டு.... காலையில போகாதவன் மாதிரி ஒன்டுக்கும் இரண்டுக்கும் போற மாதிரி அங்க இங்க என்டு போஸ்..... அவன்ட முதல் எழுத்து “கு” இரண்டாவது எழுத்து “ரு”....





எனக்கும் அட்ட கடிச்சது.... ஒரு அட்ட.... ஆனா.. எவ்வளவு ஏலுமோ .. அவ்வளவு குடிச்சுட்டு.. ரத்தத்த... 

..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................


இப்பிடி கணக்க பேருக்கு நடந்திருக்கும்... அவங்க மேல உள்ள கோட்டுள.. உங்கள பற்றி நிரப்புங்க..... எனக்கு வேற தெரியாது...நீங்க அட் பண்ணினா.. நான் சேர்க்கிறன்.. என்ன சரியா ?? 


சரிடா என்டு.... எல்லாம் முடிஞ்சு வரக்குள்ள.. பஸ்ல பட்ட பாடு இருக்கே... சப்பப்பா... நினைச்சாலே தலை இடிக்குது..... 

பொம்பளங்களா அவங்க.... சண்ட பிடிக்கிற என்டா அவங்கட்டதான் ட்ரேய்னிங் எடுக்கனும்.... நம்மட பொடியங்கள் உசுப்பேத்தினா.... வாலை கிளப்பி சூடு போட்ட மாடு போல சண்ட சும்மா அப்பிடி துாள் பறந்துச்சு....

ஒருமாதிரி சண்டைய சமாதான படுத்தி.. வீடு சேர போதும் ..போதும் என்டு ஆச்சு.....




3 comments:

  1. /* நாங்க ரொம்ப நல்லவங்க..... டூருக்கு பிறகு கெட்டவங்களாகிட்டம் என்டு நினைக்கிறன்... */

    அது அப்பிடி இல்லை trip க்குப் பிறகு confirm பண்ணிட்டாங்க.. அவ்வளவுதான்.....

    nice.....

    ReplyDelete
  2. ஆனா..ரணகலத்துலயும் நீ and your ரூம் மேட் அங்க இங்க என்டு போட்டோக்கு போஸ் குடுத்தத சொல்லலியே..

    ReplyDelete
  3. சாரி பாஸ்........... எங்க பெருமைய நான் எப்புடி என் வாயால சொல்லுவன்....

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails