Sunday, March 7, 2010

ஓடினேன் ஓடினேன் ................. ???????






இது மிகவும் சுவாரஸ்யமானது.... இது எங்கள் சொந்தக்கதை.. சோகக்கதை... அனைத்தும் நடந்தவை......
இதில் நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாகவே பாதிக்கப்பட்டேன்(விவேக்கின் பாணியில்)



4-01-2010 நான் வீட்டில் நிம்மதியற்று அங்கும் இங்கும் உலாவிக்கொண்டிருந்தனான்... (என்னடா இவனுக்கு வேலை இல்லன்னு பாக்கிறீங்களா ??? அப்பிடி ஒன்னும் இல்ல... 2 நாளையாள எங்கட 1st semi ) அதானுங்க பரீட்சை..... முதல் முதலா கம்பஸ்ல டெஸ் செய்யப்போறம் இருக்காதா பின்ன.... முதல் பாடம் mathematics . இதுக்கு பிறகு கேட்கவா வேணும்... இப்ப உங்களுக்கே என்ட பிரச்சனை விளங்கி இருக்குமே....

எங்களுக்கு படிப்பிக்கிற maths வாத்திகள்(அதாங்க கம்பஸ் lecturers ) மொத்தம் 4 பேருங்க... அதுல 3 பேர் படிப்பிக்கிறது மண்டைக்குள்ளாள போகும்( அதுக்காக. மட்ட பாடம் எல்லாம் பிரிச்சு மேய்வா போல என்டு எல்லாம் கேக்க கூடாது....). பாவம் எங்கட பொடியங்களும் பொட்டைகளும் , அரளை பேந்த மாதிரி முளிக்கிறவங்கள்..அவன் என்ன கதைக்கிறான் என்டும் விளங்காது... சும்மா விட்டாலே பொடியங்கள் குரட்டை பறக்க.. நித்திரையில கிடப்பாங்கள்.. இவங்க பாடம் என்டால் பொடியங்களுக்கு ஒரே சண்டை யாரு பின் கதிரையில இடம் பிடிக்கிற என்டு....(என்னத்துக்கு மட்டையாகத்தான்....) . படிப்பிக்கிறதுல ஒருத்தன் சிரிச்சே கொள்ளுவான் (அப்பிடியொரு சிரிப்ப நான் என்ட வாழ் நாள்ல பாத்ததே இல்ல...). அது மட்டுமெண்டா பருவால்ல.. அவர்ட பஜ்ச் ஐ தாங்க முடியாது....(We need silence please !!)


சரி அதவிடுங்க .. மேட்டருக்கு வாறன்.... அப்பிடி உலாவிக்கொண்டு இருக்கக்குள்ள (என்னடா இவ்வளவு நேரமா உலாவுறான என்டு பாக்கிறீங்களா...), ஒரு மிஸ்கோல்..

யாரண்டு பார்த்தா நம்மட மதிப்புக்குரிய சீனியர் அண்ணே... சரி.. சீனியர் அல்லோ..... உடனே மிஸ்கோலுக்கு பதில் மிஸ்கோல் குடுத்தா பிரச்சனை என்டு.... கோல் எடுத்தன் அந்த சீனியர் அண்ணன் “ டேய் ... இத நான் எப்பிடி உன்னட்ட சொல்ற என்டு எனக்கு தெரியல்ல... வெளில தெரிஞ்சா பிரச்சனையாகிடும்.. அதுதான் உன்னட்ட சொல்லுறன்.. (இப்படி ஏதோ கடும் பில்டப்... செம பீலா... போருக்கு போற அரசன் கூடி இப்பிடி பிளான் பண்ணிருக்க மாட்டான்... , இப்பிடி ஒரு பெரிய பில்டப்புக்கு பிறகுதான் மேட்டருக்கு வந்தார்... மச்சான் உங்கட Semi Paper சில லீக் ஆயிடுச்சு... யாருக்கும் தெரியாம... உன்ட ரும் மேட்ட மட்டும் கூட்டிட்டு வந்திடு..” வேற யாருக்கும் சொல்லக்கூடாது என்டு கட்டுபத்த பிள்ளையார் மேல சத்தயம் வாங்காத குறையா கெஞ்சினாரு..(என்னடா.. கட்டுபத்தயில எப்படா பிள்ளையார் முளைச்சார் என்டு பாக்கிறீங்களா , எல்லாம் சும்மாங்க...) இது என்னடா வம்பா போச்சு என்டு... சரி சரி என்டு ஒருத்தருக்கும் சொல்லாம் கம்பஸ்ற்கு போக, நானும் என்ட ரூம் மேட்டும் ஏதோ கம்பஸ்க்கு புதுசா போற மாதிரி பேந்த பேந்த முளிச்சு கொண்டு போனம்.. அங்க போனா அங்க பாத்தோடனே... நான் அப்படியே சாக் ஆகிட்டன் ... நம்மட அவ்வளவு பொடியங்கள்... பட்டிக்காட்டான் முட்டாசு கடைய பாத்த மாதிரி பேந்த பேந்த முழிக்கிறானும்ங்க..... பாழப்போன இடி அந்த சீனியர் தலைல விழ.... சீக்ரட் சீக்ரட் என்டு என்னமா பில்டப் குடுத்தோ்.... பாவிப்பய புள்ள.. இப்படி சந்திய கிழிய நாறடிச்சுட்டாரே , இதுதான் இவர்ட ரகசியமா?? ????? நல்லா கிளப்புறாங்க ஐயா பீதிய..... ஒருவனை ஒருவன் பாக்கறாங்க... யார்டா இவங்களுக்கு சொன்னாங்க... என்டு போல.... அடோய் அட கொய்யாலே.. உங்களுக்கு யார் சொன்னதோ.. அவங்கதான்டா எங்களுக்கும் சொன்னாங்க என்டு சீனியர்ஸ்ச போட்டுக்குடுக்க விரும்பல்ல.... சரி, அதுதான் வந்துட்டமே என்டு.... அவனவன் கொட கன்டீன்ல குரூப் குரூப்பா சீரியஸ் டிஸ்கசன்...... “ என்ன பேப்பர் மச்சான் அவுட்டாம்..... , மச்சான் கூடுதலா Fluid உம் Mechanics உம் ஆம்..... , அப்பாடா !!! அப்படியன்டா இரண்டு பாடம் கைல வராதுடா ??? பாத்துகீத்து மட்ட பேப்பர்களையும் எப்படியாவது கடாவச்சொல்லனும்டா... இதுக்குள்ள ஒன்டு இரண்டு சீரியஸ் படிபாளிகள் அவங்க யார் என்டா... நம்மட அறிவுமேதை, விளையாட்டுசிங்கமும்.... அடுத்தவன் அவனை( அவங்கட அப்பாட முன் எழுத்தையும்.. அவன்ட முன் எழுத்தையும் வச்சு கூப்படுறவங்க..) அவனும் நம்மட மட்ட பொடியங்களுக்கு குப்பி எடுக்கிறானுக... இப்பிடி வரும் இப்பிடி வரும் என்டு...... நாமலும் அவங்க சொல்றது எல்லாம் சரி என்டு.... (ஏன்டா எங்களுக்குதான் ஒன்னுமே தெரியாது.... உண்மைய சொன்னா.. அவங்க எந்த பாடத்த பற்றி கதைக்குறானு்ங்க என்டு கண்டு பிடிக்கவே எனக்கு 10 நிமிஷம் ஆய்ட்டு...)”.. சரி இப்பிடியாவது கொஞ்சம் படிப்பம் என்டு படிச்சா..




அதுக்குள்ள எங்கட சீனியர்ஸ் குப்பி மாஸ்டர்கள் , கொட கன்டீனுக்கு திடீர் விஜயம்.... எல்லோரும் அலர்ட் ஆய்ட்டாங்க...... ஐயா .. பேப்பர் வந்துட்டு ஜாலி ஜாலி என்டு....... பார்த்தா அவங்க கைல போப்பர் இல்ல.. வெறும் பைல் தான்....

விடுங்கப்பா.. இவங்களால ஒரே ஒரு பேப்பரதான் ஆட்டய போட முடிஞ்சுது (நாம என்டா கலக்கிறுப்பம் அல்லோ...) என்டு மனச சமாதான படுத்திட்டு.... டக்கண்டு பேப்பர தாங்கப்பா.... என்டு ஏக்கம் வேற.....என்னதான் இருந்தாலும். அவங்கட பழக்கத்த மாத்த முடியல்ல , அதுதான் அவங்கட பில்டப்பு (
நல்லா படிக்கிற 2 பேர வர சொன்னாங்க... உடனே நம்மட விளையாட்டு அறிவுமேதையும் இன்னொருவனும் போனாங்க... என்ன என்டா.. இவங்களுக்கு முதல்ல எல்லாத்தையும் விளங்கப்படுத்தின பிறகு எங்களுக்கு கேள்வியையும் விடையையும் தருவாங்களாம்... பிரச்சனை என்டா இவங்கட்ட கேக்கட்டாம்...
என்டு அவங்களுக்கு பெரிய அறிவுரையோ.. அறுவையோ... வரக்குள்ள அழாக்குறையா வந்தாங்கள்... ஆனா இன்னம் பேப்பர் குடுக்ல்ல... ஏன் என்டா... இங்க “சி” னா பொடியல் நிக்கினமாம்... வெளில வந்தா பிரச்சன வெடிச்சுடுமாம்..என்டு பயமுறுத்தினாங்க.... அதால.. தனிய கூப்பிட்டு தான் தருவாங்களாம்.. (இப்பவே சுதாகரிச்சிருக்னும் ....தனிய கூப்பிடுறாங்களே... ஆப்பு பக்கத்துல என்டு.... கொஞ்சம் யோசிச்சிருக்கனும் ஆனா பேப்பர் பிட்டடிக்கிறது அனைத்தையும் , அறிவையும் மறைச்சுட்டு )

)..... சரியப்பா.. எவ்வளவு முடியுமோ... அவ்வளவுக்கு பண்ணுங்க... எங்க தலை விதி... பேப்பர் தரபோறாங்களே... சகிச்சுதானே போகனும்..

முதல்ல எங்கல குரூப்பா நிக்க வேணாம் தனி தனிய பிரிஞ்சு தாங்க சொல்ற இடத்துக்கு வரட்டாம் என்டு சொன்னாங்க...
என்ன செய்றது ...நாய் வேஷம் போட்டா குரைச்சு தானே ஆகனும்.... இது எங்களுக்கு புது அனுபவம். (ஏன்னா பள்ளிக்கூடத்துல இப்படி அனுபவம் கிடைச்சதுல்ல பாருங்கோ.....) கடைசில போதும் போதும் என்டு ஆகிட்டு. அங்க இங்க என்டு கடைசில மெசேஜ் ஒன்னு வந்துச்சு... மச்சான் நம்மட ground pavilion க்கு வரட்டாம்.....அது சரி, நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் .. அது குப்பயில போய்தானே கிடக்கும் என்ட கதையா..... என்னதான் இவங்களுக்கு டெஸ்ட் என்டாலும், விளையாட்டு புத்தி போகலயா... ஏன்டா இவங்கள் எங்கள பவிலியனுக்கு கூப்புடுறாங்க.... ஏதாவது மெச் கிச் வைச்சு வின் பண்ணினாதான் பேப்பர் என்டு ரூல்ஸ் போட்டாலும் போடுற பயலுவ இவங்க ... (யாரையும் நம்ப முடியாது பாருங்க.. ) நாளையண்டைக்கு வேற டெஸ்ட் இருக்கு.... பொடியங்கள் எப்பிடியாது பிட் அடிச்சு A or A+ எடுக்கிற என்டு கங்கணமம் கட்டி வந்தவங்க பாருங்க. (ஏதோ சொந்தமா படிச்சு எடுத்தாலும் பருவால்ல..... இது கேவலம் கெட்ட பிழைப்பு பாருங்க.... என்ன தான் இருந்தாலும் நான் இத சொல்ல கூடாதுதான் )ஆனா எனக்கொரு சந்தேகம்.. ஏன்தான் படிக்குற பயலுவ பேப்பர தேடி வந்தாங்களோ தெரியல....(என்ட ரூம் மேட்டையும் சேர்த்துதான் சொல்லுறன்...)

பவிலியனுக்கு எல்லா பயலுவலும் போறாங்க.. மணி ஏறத்தால பி.ப 7.30 இருக்கும்.... நல்லா இருட்டிட்டு... சரி பவிலியனுக்கு எல்லோரும் இறங்கி போறாங்க.. நானும் போறன். அப்ப , ground entrance ..சனியன் பிடிச்ச பாலாப்போன ஜோடிகள்.... இந்தஇரவு நேரத்திலுமா.... காதலுக்கு கண்தான் இல்ல என்டு சொல்லுவாங்க.... அதுக்காக கால, நேரம் தெரியாததுமாவா ?? இவ்வளவு பேர் போனாங்க ....(கிட்டதட்ட 35 பேர் இருக்கும்).. அத கூட கவனிக்காம... எப்பிடியங்க என் வாயால சொல்றது....( உவேக்.... கண்ணை சுழித்த வண்ணம்...), சரி அத விடுங்க , நம்மட கதைக்கு வருவம்...

இறங்கி பவிலியனுக்கு போனா , அங்க கும் இருட்டு..... ஏன்டா பாவிப்பயலுவலா... லைட்ட ஏன்டா ஓஃப் பண்ணி வச்சிருக்கீங்க.. இங்க என்ன மிட்நைட் மசாலாவா போது...... அதுக்கொரு காரணம்.. விஷயம் லீக்காகப்படாதாம்.... சப்பப்பா... முடில.
  • இவங்கட சீக்ரட்டை பற்றிதான் எங்களுக்கு தெரியுமே.... யாருக்கும் சொல்லாத என்டு.. ஊருக்கே பீலா விடுற பயலுவ தானே. அப்ப அங்க பவிலியனுக்கு முன்னால எங்கட குப்பி தெய்வங்கள் . ஒருவர் (உன்னை போல் ஒருவன் படத்துல நடிச்ச நாயகன்ட பெயரகொண்டவர்..) , மற்றவர்... கா..........க் ...(இவரும் ஒரு நடிகர்ட பெயர கொண்டவர்.)அண்ணே... இவங்கள போய் நாங்க ரொம்ப நல்லவங்க................................ என்டு நம்பிட்டம். அவங்க வேற அறிக்க விடுறாங்க.. “ டேய் “சி” ஆக்களுக்கு விஷயம் வெளில போனா கொண்டுடுவாங்க...., அதான் இங்க தனியா உங்கள வரச்சொன்னாங்க... இப்ப நாங்க என்ன என்ன கேள்வி வரும் என்டு விளங்கபடுத்துறம்.. பிறகு பேப்பரை தாரோம்... போன் லைட்ட மட்டும ஒன் பண்ணுங்க என்ன..” என்ட.. எல்லோரும், தங்கட பெருமைகளை வெளில எடுத்தாங்க (அதாங்க அவங்க போன்.. N97 , Sony Ericsson, Samsung , என்டு சீன் காட்டினாங்க..) நான் மட்டும் என்ன குறைஞ்சவனா என்டு நம்மட Samsung ஐ எடுத்த.... கமரா லைட்ட ஒன்பண்ண போனன்.......................................
  • 9
  • 8
  • 7
  • 6
  • 5
  • 4
  • 3
  • 2
  • 1
  • 0
___________________________________________________________________
____________________________________________________________________

என்னடா.... இவன் நம்பர் சொல்லி கோடு போடுறான்.... பிறகு ரோடு போடப்பபோறான் என்டு நினைக்கிறீங்களா....இல்லங்க.. இனிதான்

கதையிட கிளைமெக்ஸ்......


திடீர் என்டு உன்னைபோல் ஒருவன் அண்ணனின் குரல்.... டேய் “சி” னாடா... ஓடுங்கடா................ என்டு சொன்னதுதான் மிச்சம்...


ஒருத்தன் ஓடினான்.... எல்லா மாடும் ஓடுது என்டு கந்தையர்ட பேத்தகன்டு குட்டியும் ஓடின கணக்கா... நம்மட எல்லா பொடியலும் ஓடுறாங்கள்.... டேய் ... டேய்... என்னையும் விட்டுட்டு போய்டாதியூங்கடா.. என்டு நானும் எடுத்தன் ஓட்டன் பாருங்க முன்னங்கால் மூஞ்சில அடிபட.. (எவ்வளவு காலமாத்தான்.. பின்னங்கால் பிடறியில அடிபட என்டுசொல்லுவீங்க... சின்ன ச்சேஞ்சுக்கு....) பின்னால வர்றவங்க சிங்கள காட்டாங்கள் என்டத நிரூபிக்கிற வகையில கைல இலை குலைகள துாக்கிட்டு ஓடி வந்தாங்க.... நாய்கூடி இப்பிடி பூனைய திரத்தினது இல்ல..

பின்னால பாத்தா கொலை வெறி பிடிச்சு திரத்தினாங்க..... இந்த சீன்லையே ஒவ்வொருவனுடைய எக்ஸ்பீரியன்ஸ்சை.. என்னால விபரிக்க முடியாது... ஆனா.. சில பல கூத்துக்கள்... நடந்துச்சு... (எனக்கு தெரிஞ்சது.. இவ்வளவும் தான்.. யாரும் கூட தெரிஞ்சா கொமண்ட்டுல போடுங்க )






அதுல நம்மட பொடியன் ஒருவன் (நிறம் என்பதின் ஒத்த பெயரை கொண்டவன்) :-கீழ விழுந்துட்டான் திரத்தி வந்தவங்கள் கிட் வந்த உடனே “ காண்ட எப்பா... காண்ட எப்பா..... (அதாவது அடிக்க வேணாம் அடிக்க வேணாம் என்டு சிங்களத்துள) ” எப்பிடிதான் அந்த நேரத்துல அவனுக்கு சிங்களம் வந்துச்சோ தெரியல்ல...... ஆனா அதுல என்ன காமடி என்டா அடிக்க வந்தவங்க இவனை தொட கூடி இல்ல.... இவன் குனிஞ்சு கத்திக்கொண்டிருந்தான்.. அவங்க போனது கூட தெரியல்ல....



இன்னொருவன்( குட்டி என்று செல்லமாக அழைக்கப்படுபவர்...) விழுந்தவன் :- “ஐயோ அம்மா... அம்மா... அடிக்காதீயுங்கோ...அடிக்காதீயுங்கோ..”என்டு காட்டு கத்து கத்தினான்.... ஆனா இவனுக்கு எங்கதான் மூளை போச்சோ தெரியல.. வந்தவங்க ”சி” , அவங்களுக்கு தமிழ் தெரியா என்டு..

அடுத்த என்ட ரூம்மேட இருக்கானே... இருக்க மட்டும் என்னோட தான்க இருந்தான்.. பிறகு எங்க போனான் என்டு எனக்கே தெரியல... நண்பர்கள் பிகர கண்டாதான் காய் வெட்டுவாங்க என்டு பார்த்தா.... குலைய கண்டாலும் ஓடுறாங்கப்பா... என்ன செய்ற தன்கால் தான் தனக்குதவி (தன்கை தான் தனக்குதவி என்ட மாதிரி. (சின்ன சேன்ஞ்சு) ) என்டு ஓடினேன் ஓடினேன் ஏழுமானவரை ஓடினேன்........ அங்கே காண் இருந்ததால் பாஞ்சு பாஞ்சு ஓடினேன்..... கடைசியில் கம்பஸ் கேட் வந்துவிட்டதால் நின்டு விட்டேன்....








நம்மட அறிவுமேதை விளையாட்டு வீரன் இருக்கானே..... அவன் தான் ஓடுறதுல கிங்கே... அவன் கண்மண் தெரியாம ஓடினதுல.... மெக்கானிக்ல் டிப்பார்ட்மென்ட்டுக்குள்ள ஓடிட்டான்... ஆனா இப்ப அவன் டொனிக்.. படிக்கிறான்....


நெக்ஸ்ட்டு நம்மட.. ஊமைக்குசும்பன் யக்கா... - அவன் தாங்க நம்மட கதையோட ஹீரோ... ஓடின ஓட்டத்துல இடையில விழுந்துட்டான்.. விழுந்தவன்ட கைவிரல் மடிஞ்சு போச்சு...
சரி.. இப்ப அதுவா முக்கியம் என்டு எழுந்தவனுக்கு பின்னால குலையடி... (நான் அவன் குலைஅடிக்கிறத பத்தி சொல்லல்ல) மறுபடியும் விழுந்தான்...
பிறகு எழும்பினான்.... மறுபடியும் குழையடி..... (ஆல மரத்தில இருந்து விழுந்தவன ஆட்டோ ஏறி மிதிச்சது போல.... (இதுவும் ச்சேன்ஜ் தாங்க...))
மறுபடியும் விழுந்தான்.... அவனபாக்க அவங்களுக்கே பரிதாபமாபோய்ட்டு.. போல... கைய பிடிச்சு எழுப்பிவிட்டாங்க... ஓடுடா என்டு.... என்னதான் இருந்தாலும்... இந்த விரல் உடைஞ்சது.. அவனுக்கு டெஸ்ட்ல ரொம்ப பாதிப்பா போச்சு..... (சின்ன பீலிங்கு , என்னதான் இருந்தாலும் கதையில சென்ட்டிமன்ட் சீன் இருக்கத்தானே வேணும்...அதான்..).


பாவிப்பயலுவ திரத்தின திரத்துவல நான் கூட 2 இடத்துல விழுந்துட்டன்... அதால என்ட சம்சங்.... பம் பம் ஆகி விழுந்துட்டு.... லைட்டா சின்ன கிரேச்....


இப்பிடி எல்லோரும்... ஓடிக்கொண்டு இருக்கக்குள்ள.... ஓடினதுல ஒருவன்... திடீர் என்டு .. டேய் அங்க நம்மட குப்பி மாஸ்டர்(உன்னை போல் ஒருவன் ஹீரோ) மாட்டிட்டேரோ தெரியல.. பாவமடா அந்த மனுசன் என்டு பீலிங் வேற....
ஆனா அந்த கபோதி பயலுக்கு தெரியல......................................... இதல்லாம் அவங்கட செட்டப் என்டு............................................






ஆமாங்க.. இங்கதான் கதையிட டேனிங் பொயின்ட்.....

எங்கள திரத்தினது “சி” னா பயலவ இல்ல..... நம்மட “த” பயலுவ..... பிரேக் இல்லா தண்ணி லாறி அவங்கள மோத....................................(வாசிக்கிற உங்களுக்கே இப்படி கடுப்பாகுது என்டா எங்களுக்கு எப்படி இருக்கும்...)

என்ன.. நாங்க அவங்கள போட்டு அடிக்கவா முடியும்... துரத்தி மட்டுமில்லங்க...

செம குலையடி......... அவங்க எங்களுக்கு அடிக்க..... நாங்க அவங்கட்ட அடிவாங்க.... மறுபடியும் அவங்க எங்களுக்கு அடிக்க... மறுபடியும் நாங்க அவங்கள்ட அடிவாங்க.... இப்பிடியே போனது........

பிறகு என்ன.... பிறகு பன்(Fun) தானே....

ரொம்ப ஓவராத்தான் வதைச்சுட்டனோ....... சரி விடுங்க.... இவ்வளவும் தான் மெயின் மெட்டர்....


மிச்சசொச்சம்...... அடுத்து எப்போதாவது... (வரவேற்பை பொருத்து....)

5 comments:

  1. அண்ணையிட கதை சரி தான்...ஆனா ஒரு சின்ன திருத்தம்..அது என்னன்னா முதல் பாடம் maths இல்ல...mechanics...அதாலதான் இந்த கதையே டெவலாப் ஆச்சுது...அப்புறம் ஆனா அண்ணை உங்கண்ட காமெடிய நீங்க சொல்லவே இல்லையே..அதுலயும் specific a உங்கள குறி வைச்சு ஒரு குரூப்பு தாக்கிச்சே..மறந்துட்டீங்களா ....ஆனா அண்ணை நம்ம பசங்களுக்கு ரொம்ப பாசம் ஜாஸ்தி..ஏன்னா கொஞ்ச பயலுக வெள்ளவத்தையில இருந்து வரேவே இல்லையே..மத்தது அண்ணை....ரூம் மேட் விட்டு ஓடினான் என்டீங்களே அப்ப நீங்களும் அவன விட்டு ஓடினீங்க எண்டது சரிதானே....

    ReplyDelete
  2. machan superda.............
    Nalla ethirkalam iruku
    blogspot superb

    ReplyDelete
  3. Bruce தம்பி..... சரி...சரி நீங்க சொன்னது சரி.... முதல் பாடம் Maths இல்லதான்.... ஏதோ Mechanic என்டா மட்டும் என்ன.... திறமோ (உங்களை இதில் அடக்கவில்லை....)

    அதோட... நீங்க சொன்னது போல... சிலர் வரலதான்... என்ன செய்றது... அவங்களுக்கு நல்ல காலம் .. என்டாலும் அவங்க அந்த திரிலிங்க இழந்துட்டாங்க பாருங்கோ.... !!!

    ReplyDelete
  4. great experience...... good job of rcords sweet memories.
    and waiting for the same experince record which may be more interesting from your juniors.

    ReplyDelete
  5. hahaha....can't help laughin bro............
    nice one........:)

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails