Monday, March 19, 2012

கண்ணீர் துடைத்த கைகள் ...

கண்ணீர் துடைத்த கைகள் ...


கண்ணீர் துஐடக்க கண்கள் கைகள் தேடின ....
கட்டியணைத்து தலை கோற அன்னை அருகினில் இல்லை
பக்கப்பலமான அண்ணன்மார் என் பக்கத்தில் இல்லை
தோள் சாய நண்பர்கள் நண்பர்களாய் இல்லை, 
இல்லை இல்லை நான் நண்பனாக இல்லை....
என் காதலி யார் என்று எனக்கே இன்னும் தெரியவில்லை - நல்ல வேளை
அவள் இல்லை,இல்லையெனில் அவளால் ரொம்பத்தொல்லை..
திடீர் என்று வந்த கைகள் என் கண்ணீர் துடைத்தன..
என் கைகள் என்னிடம் இருக்க .. இனி யார் கை தேவை ???

Thursday, March 15, 2012

வாணன் கண்ட வதையன் !!!!

வாணன் -
நடிக்கத்தெரிந்த
நட்புகளுக்கு தெரியவில்லை
நானும் நடிகன் தான் என்று

வதையன் -
நானும் நடிக்கத்தான் பார்க்கிறேன்
நடிக்க மட்டும் என்னால் முடியவில்லை
நடிப்பு என்று தெரிந்த பின்பு
நடிக்க இனி தேவையில்லை
நாடகம் முடிய முன்பு
நடிப்பாவது முடியவேண்டும்...

வாணன் -
முடிவில் மட்டுமே
முடிபவை முடியக்கூடியவை
நாடியும் , நடிப்பும்
நானும் தான் - போட்டியின்

வதையன் -
உனக்கு புரிந்தவை சில
 எனக்கு புரியவில்லை , ஏன்
புரியக்கூடி இல்லை...
நாடகம் ஒன்று போகிறது - ஆனால்
கதை மட்டும் புரியவில்லை...

வாணன் -
புரிந்தவை எல்லாம்
புதுமையும் இல்லை.
புரியாதவை எல்லாம்
புதுக்கவிதையும் இல்லை..
நடக்கும் போராட்டங்களில்
நடாத்தக்கடினமானது வாழ்க்கை தான்..
நாடும் விருப்பங்களினால் ..
நனைவது எல்லாம் என் தலையனைதான்..

வதையன் -
 கவிதை எழுதப்போன நான் - இன்று
கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன்...
கவிஞனாகத்தான் ஆக முடியில்லை....ம
கதையாசிரியனாகவாவது ஆகிறேன்..

தன்னை பற்றி சிந்திக்க மறக்காத மனிதன்...
பிறறை பற்றி சிந்திக்க மறக்கிறான்...
நட்பு என்று வந்த பிறகு
சில நாடகங்கள் தேவையில்லை...

வாணன் -
நாடகமாகிப்போன வாழ்வில்
நட்பிற்கும் தேவை நடிப்பு - சிலநேரம்
பாடமாகிக்கொண்டிருக்கும் வாழ்வில்
பள்ளியறைக்கும் தேவை பணம்தான் - பலநேரம்..

பிறக்கத்துடிக்கும் பிஞ்சுக்கு
 தெரிவதில்லை தாய்மையின் வலி..
மறைக்கத்தெரியும் மனதிற்கு
மறக்க மட்டும் ஏனோ தெரியவில்லை..
சிரிக்கத்தெரிந்த கண்களுக்கு
சிந்தத்தெரிவதில்லை சில கண்ணீரை...


வதையன் -
முடிவு ஒன்ற தேடி முடிவெடுப்போம்...
முடியாது எதுவும் இல்லை என்றால்...
முடிவு மட்டும் ஏன் முடியாது ??...
முற்றாக முற்றுபெற முடிவாய் முடிவெடுப்போம்..
இத்தோடு முடிக்க எண்ணி முயல்கிறேன் முடிவோடு...


வாணன் -
முடிந்த முடிவுகளுக்கு ..
முடிவு எடுக்க தேவை இல்லை....
படிந்த கறைகளுக்கு
பரிகாரம் செய்ய ஏதும் இல்லை....
இறங்கா பாதையிலே
சிருங்கார வாழ்க்கையிலே ....
சிறகடிப்போம் - நண்பர்களாக  - நட்புக்காக -”நண்பர்களுக்காக...”

Monday, March 12, 2012

புரியவில்லை........

புரிந்து கொள்ளப்பார்க்கிறேன் ஒன்றுமே புரியவில்லை...
என்னை அறிந்து கொள்ளப்பார்க்கிறேன் அறிய முடியவில்லை...
என்னைச்சுற்றி பல மாற்றங்கள் தெரிகிறது - ஆனால்
ஏன் என்று மட்டும் எனக்கு புரியவில்லை......

சிலரின் திடீர் விலகலும் பலரின் தோற்றப்பலகலும்
ஏன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை
நட்புக்கள் சிலவற்றின் திசைமாறிய பேச்சுக்கள்...
நட்பினை கற்பழித்தால் போல் வசைபாடுகின்றன....

நடப்பவை பல நாடகமாக தெரிகிறது....
பலர் நடிகர்களாக கூட தெரிகின்றனர்....
ஆனால் நடிப்புக்கள் மட்டும் எனக்கு புரியவில்லை...
புரிவது எப்படி என்று எனக்கு புரியவில்லை....
புரிந்தவர்கள் புரியவையுங்கள்.. புரியாதவர்கள் புரிந்து கொள்ளுங்கள் ....

Tuesday, March 6, 2012

கம்பஸூம் தமிழும்..

நாங்களும் தமிழும்

வில்லங்கமான் தலையங்கம்.வில்லங்கத்தை விலை குடுத்து வாங்குவது என்றால் எனக்கு ரொம்பபிடிக்கும்.எங்கட கம்பஸில ஆறு நல்ல விஷயம் நடந்தா ஆயிரம் வில்லங்கங்கள் நடக்கும் இல்ல வலுக்கட்டாயமாக நடத்தப்படும். என்னதான் நான் அந்த நல்ல விஷயங்கள் நடக்கக்குள்ள இருக்காட்டியும் தெரிஞ்சோ தெரியாமலோ அத்தனை கெட்ட விஷயங்களிலயும் என்ட பங்களிப்பு பப்ளிக்கா இருக்கும்.சரி அத விடுங்க நம்மட விஷயத்துக்கு வருவம் அது என்ன கம்பஸூம் தமிழும் என்டா வில்லங்கம் என்டு கேக்குறீங்களா..... சுருக்கமா சொல்ல போனா இரண்டும் டொம் அன்ட் ஜெரி (Tom and Jerry)  மாதிரி இரண்டுக்கும் ஒத்தே வராது .. ஆனா எப்பவும் ஒன்டாத்தான் இருக்கும்.

எங்கட பொடியங்கள் தமிழை எது எதுக்கு பாவிக்க கூடாது என்டு முன்னோர்கள் வரையறுத்து வச்சுறுக்காங்களோ அதுக்கு மட்டும் தான் பாவிப்பாங்கள்.எங்கள் பல்கலையில்  பலகலை கற்ற செந்தமிழ் கற்று பைந்தமிழ் மறந்த கவிஞர்கள் பலர் உள்ளனர்.எங்கள் தமிழ் சற்று வித்தியாசமானது ஏன் வில்லங்கமானதும் கூட அகராதியில் அகரம் தொடக்கம் அந்தம் வரை தேடினால் கூட பொருள் கிடைக்காது இவர்களது சில சொற்களுக்கு.பார் போற்றும் பல கவிஞர்கள் இருப்பினிலும்..எம் பல்கலை கண்ட கவிஞர்கள் காலத்தால் அல்ல ...கவியாலே உலகத்ததை வெண்டவர்கள் தமிழ் காணா தமிழை கண்டவர்கள் ஏன் கொண்டவர்கள் கூட நான் மட்டும் என்ன விதிவிலக்கா .என் இலக்கணம் கண்டுதமிழிலக்கணமே ஒரு கனம் நடுநடுங்கும் ...சரித்திரமே சற்று சரிகிறது செந்தமிழ் சிலிர்க்கிறது....
சாகா கலை கொண்ட தமிழ் மொழி கலைஞர் கைபட்டால் உளி கண்ட சிலையாகும், அதுவே நம் இளைஞர் வழி வந்தால் விழியிழந்து பலியாகும். என்னடா நானே எம்மவரை பற்றி குறையாற்றுகிறேன் என்கிறீர்களா ??? எம்மவர் வாய்ட்டு மெல்ச்சாகும் தமிழ் இனியாவது நல்லா வாழும் என்டதுக்காகத்தான்.
இந்த கட்டுரை எங்கள் பலருக்கு புதுமையளிக்கலாம் , ஏன் எனில் நீங்கள் பல்கலைகள் கண்டு இருப்பீர்கள் பல்லூர்த்தமிழ் கண்டு இருப்பீர்கள். ஆனால் எங்கள் பல்கலையின் புதுமைத்தமிழ் கண்டிருக்கமாட்டீர்கள்.புதுமைத்தமிழ் கண்ட பாரதிகூட பயந்திருக்கமாட்டார் அவன் பாக்கள்(பாடல்கள்) கூட பாதிப்பு கண்டிருக்கும் என்டு .கண்ணதாசன் கூடி  கனவு கண்டிருக்கமாட்டார் தன்கவிதை இப்படி தவியாய் தத்தளிக்கும் என்று...


பட்டம் என்றல் யாதென கேட்டேன்
பெற்று பாரேன் என்றது கம்பஸ்..
வந்த பிறகு என்ன செய்ய என்றேன்...
உன்ட வாழ்க்கை உன் கையில் என்றது.
கையில் என்றால் என்னென கேட்டேன்
குத்தாமல் எழுது பரீட்சை என்றது....
குத்து என்றால் என்னனென கேட்டேன்..
குப்பிக்கு போனல் தெரியும் என்றது...
குப்பி என்றால் என்னனென கேட்டேன்..
நரகத்தில் உள்ள நரகம் என்றது......
நரகம் என்றால் என்னனெ கேட்டேன்
என்னிடம் வா ....என்றது கம்பஸ் .


பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்துதான் பாரேன் என்றான் இறைவன் 

இறப்பில் வருவது யாதேனக்கேட்டேன் 

இறந்துதான் பாரேன் என்றான் இறைவன்

மனையாள் சுகமெனில் எதுவெனக் கேட்டேன்

மனந்துதான் பாரேன் என்றான் இறைவன்

அனுபவித்தேதான் அறிவைத் வாழ்வெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றேன அருக்கினில் வந்து

"அனுபவம் என்பதே நான்தான் " என்றான் (உண்மையான வடிவம்)

பல கவிஞர்கள் எங்களால் சாவடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது பாடல்கள் கற்பழிக்ப்பட்டுள்ளன.இவையாவும் நாங்கள் விரும்பிச்செய்யவில்லை என்று சொல்ல என்னால் முடியில்லை.சத்தியாம நாங்கள் தான் செய்தோம் குற்றத்தை நாங்களே ஒப்புக்கொள்கிறோன்.இது வரை பலர் தமிழை வளர்த்தனர் , சிலர் சிதைத்தனர் , நாங்கள் தமிழை சிதைக்கவில்லை. பலரால் தமிழ் வாழ்ந்தது. என்ன ! இங்கே ஒரெ ஒரு வித்தியாசம் நாங்கள் தழிழால் வாழ்கிறோம். தழிழை வைத்து வாழ்கிறோம் . இதுவே மறைக்கப்பட்ட மறுக்க முடியாத ஒரு உண்மை.
மேலே சொன்ன அத்தனை கூத்துக்களும் உண்மை என்றாலும் , நாங்கள் ஒன்றும் அவற்றை விரும்பிச்செய்ய வில்லை ஏன் எனில் அவை எமது பல்கலையில் விரும்பப்படவில்லை. அண்ணே நான் இங்க சொல்ல வாறது இதுதான் தமிழ் எங்கள் கம்பசுல வாழல வாழல என்று அறிந்த ஊர் இதை அறிய வில்லை . முதலில் நாங்கள் அங்கு தமிழனாக வாழ்வதே கடினம் பின்னர் எப்பிடி ஐயா தமிழை வாழவைப்பது. பார் கண்ட பாரதி கூட எங்கள் பல்கலை வந்தால் பாட்டினை
( யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்)
இனிதாவது எங்கும் காணோம்,)
அது இப்பிடித்தான் மாறிக்கிடக்கும்...

அபே தன்ன language எக இங்கிலீசு வகே எக்க
சுவிட் வகே கோம கரி பழுவ நே.............
ஏன் திருவள்ளுவர இங்க வந்து ஒரு திருக்குறள சொல்ல வைங்க பாப்பம் .......
” பேட் டொங்கி சிமோல் வோல்” தான் வரும் .. 
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் எங்கள் நிலமை புதைக்கட்ட புத்தகம் என்டு சொல்றத விட . சிதைக்கப்பட்ட சித்திரம் என்டு சொல்லலாம். சிதைத்தவர்கள் யாரும் அல்ல அதுவும் நாங்களேதான்.விபரமாக சொல்கிறேன் வில்லங்கப்படாமல் கேளுங்கள். எங்கள் தழிழன் என்டவனுக்கு இருக்கிற பல நல்ல குணங்களே இதுக்கான அடிப்படை காரணம்.அதுல இந்த இரண்டும் மிக முக்கியமானவை.
1- எங்க போனாலும் , தான் ஒற்றுமையா நல்லா இருக்கிறத விட, நல்லா இருக்கிறவனோடதான் ஒற்றுமையா இருப்பான், அவன் எவனா இருந்தாலும் சரி.
2- யார் முன்னேறினாலும் அவன் கவலைப்பட மாட்டான் . முன்னேறுபவன் தமிழனாய் இல்லாதவரைக்கும்........

பொதுவா எங்கட கம்பஸ் மட்ட கம்பசுல இருந்து கொஞ்சம் வேறுபட்டது. மற்ற கம்பசுல ஒன்டு கூடுதலான தமிழ் மாணவர்கள் இருப்பாங்க , சில கம்பசுல கம்பசே தமிழா இருக்கும்.. ஆனா எங்கட கம்பஸ் பாவப்பட்டது.. பெண்களும், தழிழ் மாணவர்களும் எங்கட கம்பசுக்கு பிச்சக்காரன் கண்ட லச்ச ரூபா போலத்தான் , இருக்கிறது. இந்த இருக்கிற கொஞ்சத்துக்குள்ளேயே ஆயிரம் குழுக்ளும் ஐந்தாயிரம் பிரிவினைகளும். பிறகு எப்பிடி தமிழ் வளரும். இந்த ஒற்றுமை எப்ப ஏற்படுதோ அப்பத்தான் நாங்கள் ஒன்றாக தமிழை வளர்க்கலாம் . இல்ல என்றால் தமிழ் தானா வளர்ந்தாத்தால் உண்டு.இங்கு நாம் சிரிப்பதை விட பல விடயங்களை சிந்தியுங்கள் உண்மை புரியும்.
என்னையும் மன்னியுங்கள்.என்னால் தமிழ் வளர்ந்ததை விட தமிழால் நான் வளர்ந்ததுதான் அதிகம்.என் வளர்ச்சிய கண்டு என் தாய் மெய் சிலிப்பது போல் தமிழ்த்தாயும் என்னைவாழ்த்துவாள் என்று எண்ணி.இனி என்னால் தமிழ் வாழும் என்பதை விட எங்களால் எங்கள் தமிழ் வாழும் .. இனி அதை வாழவைப்பபோம் .

பல்கலையில் என்தமிழ் இனி கொலையுறுவதோ ??
பல்கலையால் தேன்மதுரச்செந்தமிழ் நிலை பெறாதோ????  
வலை கொண்ட மீன் போல தமிழ் நிலை குழைந்தது போதும்..
சிலை போல மலை போல இனி தேன் தமிழ் இங்கு வாழும்.

நண்பன்

நண்பன்



நினைவு வந்த நாள் தொடக்கம் ...
இன்று நின்று கொண்டுறிக்கும் நாள்வரை...
நான் நினைக்கும் நண்பர்களுள் ..
என்னை நினைக்கு நண்பர் கதை இது.........

தோள் கொடுப்பான் தோழன் என்டு 
தோள் நிமிர்த்தி சொன்னதுண்டு..
ஆப்படிக்கும் போதெல்லாம் 
அப்பாவியாய் சிரித்த்துமுண்டு
அணைத்தாலும் அடித்தாலும்
 நீ என்தன் நண்பேண்டா...

பரீட்சை எழுதியபின் நீ என்னை கண்டு சிரித்தபோது..
உன்பிழைப்பும் என்னைப்போல் சிரிக்கிறது 
என்றெண்ணி..நான் இருந்தேன்
முடிவுகள் வந்தபோது புரிந்து  கொண்டேன் 
உன் புன்னகையின் பின்விளைவை..


என்னோடு இருக்கும் நண்பர்களுள் 
எனக்காக இருக்கும் நண்பர்கள்
தோள் சாய்ந்த நேரத்தில் தோழனாய்
 தோள் கொடுத்தவன் உண்டு
எனக்காய் என்னோடு நடந்தவன்   
அவள் வீடுவரை நடந்தவள் உண்டு
,நண்பியாய் நம்பிக்கை நட்புடனே 
 கொடுத்தவள் உண்டு
மனம் புதைந்த நேரத்தில் மனதோடு 
மனம் விட்டு கதைத்தவன். உண்டு
கண்ணீர் விட்ட நேரத்தில் கட்டியணைத்து 
அழுதவன் உண்டு
இத்தனை பேர் இருக்க 
எனக்கேதும் தேவையில்லை ....
துயரங்களின் வருகையிலே உன் 
நண்பனை நீ அறிந்திடுவாய்..

comment

LinkWithin

Related Posts with Thumbnails