Sunday, December 9, 2012

18 மாதம்

 அவள் பெயர் கஸ்தூரி.எனக்கும் அவளுக்கும் பெரிய வயசு வித்தியாசம் இல்லை.இருவரும் அடிக்கடி சந்திப்பது வழக்கம் நேரிலில்லையெனினும் , அவளது முகம் மற்றும் குரல் எனக்கு நன்கு பழக்கப்பட்டது.நாம் இருவரும் மூன்றறை மாத கற்பினிகள். என்னை அவள் அறிவாளோ தெரியவில்லை ஆனால் எனக்கு அவளை நன்கு தெரியும் நேரம் பிசகாமல் எனது எமது உறவு தொடர்ந்தது.அவளது வாழ்கை கண்டு எனது கண்கள் புன்னகைத்ததை விட வாய்கள் அழுததுதான் அதிகம் , என்னோடு எனது தாயும் நொந்து கொள்வாள்.எனக்கு நேரத்துணையாய் இருப்பவளுக்கு என்னால் எதையும் செய்ய முடியாததை நினைத்து என் மனம் கடிந்த நாட்கள் அதிகம்.

இப்போது எனக்கு நிறைமாதம் இன்னும் ஒரிரு வாரங்களில் எனக்கு தாய் என்ற பாட்டாபிஷேகம் நிறேவேற இருக்கிறது.அவள் எப்புடி இருக்கிறாளோ?.வைத்தியசாலை பயணங்கள் , சோதனைக்கூட வேதனைகளின் நிமிர்த்தம் எமது சந்திப்பு உடைந்திருந்து.

இரு வாரத்தின் பின் என் மகன் எனக்கு தாயென முடி சூடினான். அடடே.... அவளுக்கு .. ??? ஆணா !! பெண்ணா !!!!! எனது மகனுடன் உருண்டோடிய நாள்களில் அவளை மறந்தேபோய் விட்டேன். ஒன்பது மாதங்கள் கழிந்தோடின.... எனது மகனுக்கு இப்போது ஒன்பது மாதங்கள் !!!!

இன்று எப்புடியாவது அவளை சந்திப்பது என எமதுசந்திப்பு நேரப்படி இரவு ஏழு மணிவரை காத்து இருந்தேன்.அவள் அவளது குழந்தையோடு வருவாள் என விழி வைத்தேன்.அவளும் வந்தாள் .... !! எனக்கு நெஞ்சடைத்து விட்டது... அவளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை... இப்போது தான் அவள் நிறைக்கற்பினியாம்.

மணி எட்டாக அவள் அஸ்தமனமாளாள்

தொலைக்காட்சியின் அடியில்  ”தொடரும்.........”. பாடலுடன் முடிவடைந்தது.

என் மனம் சிரித்து கொண்டது .. 18 மாதமாய் சுமக்கிறாள் அல்லவா !!!!ஒரு வேளை அவளுக்கு இரட்டை குழந்தை போலும் !!!!


No comments:

Post a Comment

comment

LinkWithin

Related Posts with Thumbnails