Sunday, December 9, 2012

வெண்தூமம்

 வெண்தூமம்


எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டு சென்றாலும் எனது இனத்தை அழிக்க முன் நாம் அவர்களை கூண்டோடு பஸ்பமாக்கி விடுவோம்.
நாங்கள் அவர்களது அடிமைகளாகி அவர்களை அடிமையாக்குவதுதான் எங்களின் ஆயுதம்.இன்றில்லை என்றாயினும் அவர்கள் இறப்பார்கள். அவர்களின் மரணம் தான் எங்களின் மரணமும்.இது எங்களின் உயிர் கொடுத்து உயிர்எடுக்கும் தற்கொலைதாக்குதல்.
எம்மை அனுபவித்து விட்டு எங்களை பஸ்பமாக்கி விட்டதாக அவர்கள் நினைத்து கொண்டு இருக்கின்றனர்,இறுதியில் அனைவது நிச்சயம் அவர்கள்தான்.அது அவர்களுக்கும் தெரியும். எமது கனவுகள் எரிக்ப்படுகின்றன.
அவர்களின் ஒருவன் மட்டும் ஒருநாளைக்கு இருபதுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வினை தீக்கிறையாக்கிறான்.எமது அன்றாட மரணம் சாதாரணமானது ! ஆனால் எம்மை கற்பழித்து, காலில் போட்டு மிதித்து சாகடிக்கும் கதை இது.சொல்கிறேன் கேளுங்கள்.எனது சோகக்கதையை சொல்கிறேன் கேளுங்கள்!!

நான் அன்று தோழிகளுடன் கூடி இருந்த வேளை, அந்த நயவஞ்சகர்களுள் ஒருவன் வந்தான் என்னை மட்டும் அப்படியே உருவி எடுத்தான்.எதிர்பேதும் காட்ட முடியாது என்னால்,எனது தோழிகளின் ஜீவன வாசம் அவனது வாயில் இருந்து வந்து கொண்டிருந்தது. என் நிலமையை என்னால் உணர முடிந்தது.எதிர்ப்பேதும் காட்டதவளாய் அனுசரித்து போனேன் இருந்தேன்.அவன் காமத்தீ என்னை கொஞ்சம் கொஞ்சமாய் எரிக்க தொடங்கியது. அவன் ஆசை அணையும் வரை அவன் உதட்டின் மீது என்னிதழ் வைத்தது , அப்படியே என்னை .................. அப்பப்பா!!!!!  நினைக்கவே நெஞ்சு எரிகிறது, என் மீதான அவனது காமம் அவனுக்கு அடங்கியதாய் இல்லை.. என்னை மேல் இருந்து அடிவரை முற்றாக அனுபவித்து விட்டான்.

படுபாவி அவன் அவன் இச்சை அனைந்ததும் என்னையும் அவன் காலுக்கடியில் இட்டு கசக்கி என்னை மூர்ச்சையாக்கி விட்டு , என்னை
யும் அனைத்து சென்றான்.

என்னுயிர் அவன் வாயிலிருந்து வெண்தூமமாய் கிளம்பியது.கல் நெஞ்சக்காரன் இந்த வெண்சுருட்டின் மீது வெள்ளை மனம் கொள்ளக்கூடாதா??


பி.கு - என் அண்ணனின் கவியால் தூண்டப்பட்டு வந்த கதை இது.

கடவுளும் காதலிக்க வேண்டும்




பைந்தமிழும் கண்டிரா மல் செந்தமிழ் பேசும் நண்பர்கள் முன்
நான் தேன்தமிழ் பேசி என்ன பயன் …… ??
நான் என் தமிழிலேயே பேசுகின்றேன்
கவித்தமிழ் கண்டு கவி நயக்க நான் கவிஞனும் இல்லை
என் தமிழ் கொண்டு கவிவடிக்க எனக்கேது எல்லை…..
 என் மொழியிலும் இரு பொருளில்லை குறை கண்டால்
அதற்கு நான் பொறுப்பும் இல்லை….



தேனடை சொல்லடை தொடுத்து மடை திறந்து  
கவிநடை படைக்கும் கவிப்படையின் முன்
சிறு பொடியன் யான் கவி நயம் புனைவதோ ???
என் கவிநடைச்ச்சத்தம் கேட்டு , இடியென சித்தம் கலங்கி ,
உங்கள் செவியிடை வழியே இரத்தம் வராத வரை நான் முயற்சிக்கிறேன்.


கருத்துடை வரிகள் தம்மை எம் கவியில் பாராதீர்
பொருளாவது இருப்பதென்றான் எந்தன் பக்கம் வராதீர்..
குப்பறப்படுத்து குதறி குமுறி கிடந்த போது 
அறை குறையாய் வந்த கவி  எனக்கே இன்னும் புரியவில்லை
கவி ஆய வந்தப் பெருங்கவியே  பொருத்தருள்க எந்தன் முழுப்பிழையும்



கூப்போட வந்தவரே கூச்சலிட வந்தவரே உங்களுக்கு
நான் ஒரு  ”  ”ப்போட்டு தொடங்குகிறேன்..
(என்மேல்) கல் போட்டு விளையாடாதீர்  வேணும் என்றால்
கடலை போட்டு விளையாடுங்கள் நம்மிடை யேயும்  சில பெண்கள் உண்டு !!!!!


கடவுள் என்னை மன்னிப்பாராக !!!!


காதல் கண்ட கவிதையை விட  கவிதை கண்ட காதலே இங்கு அதிகம்
காதல் கொண்டிட கனவு காணும் எந்தனுக்கு
கனவில் முளைத்த கனவுக்கவியிது  அதுதான் .
கடவுளும் காதலிக்க வேண்டும்

கேட்பது புரிகிறது கடவுளே… ??? நான்  என்ன பாவம் செய்தேன் ???
எனைப்படைத்த முதல் பாவமதை இக்கவியில் அவர் உணர்வார் ..
பெண்ணை படைத்தவன் எனக்கென்று ஒரு மண்ணையும் படைக்கலையே !!!
அவர் செய்த பிழைகளுக்கு நான் என்ன பழியாடா ?…
தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆராதே
காதலினால் பட்ட வடு ….
நீரும் வந்து பட்டு பாரும் நாம் படும் பெரும்பாட்டை


காதல் கொள்ளும் பருவத்திலே  காதலிக்க பெண்ணில்லை
காதல் கொண்ட பெண்களெல்லாம் freeya கவும் இல்லை… - புரியாத புதிர் இது
அத்தனை ஆண்னினமும் வெட்டியார் திரிகையிலே
இத்தனை பெண்களும் யாரைத்தான் காதலிக்கின்றனர்  ? ….
கடவுள் மட்டும் வாசியாய் கைலையிலே அமர்த்திருக்க
நாம் படும் பாட்டினை அவருணர- நான் கொடுத்த நீதி இது
பாவத்தின் பயனை அவரும் அறிந்திட கடவுளும் காதலிக்க வேண்டும்


ஆடிவந்திடும் மாதர் கண்டு அங்கு கூடிக்களித்துடும் ஆடவர் முன்
கம்பஸ் வாயின் முனை நின்று கூச்சலடித்திடும் எண்ணம் கொண்டு
பிகர் கண்டு பின்னால் போய் ….. பொறுக்கியாய் முகவரியடைந்து..
அண்ணனாய் அறிமுகமாகி வாளிவைத்து நண்பணாகி
நண்பனாய் நாடகமாடி  Best friend  ஆய் வேஷமிட்டு
காதலுக்கு நாயகனாய்  நான் நினைக்கும் வேளையிலே
வில்லனுடன் அவள் வந்து நிற்கும் கொடூரங்கள்
கண்டிட கடவுளும் காதலிக்க வேண்டும்



காதலுக்கு பள்ளியிலே களம் இன்றி நான் தவித்து
அல்லிப்பூ வேணாம் என்று மல்லிகை நான் பறிக்க .
வராத படிப்பை வாடகைக்கு எடுத்து , பூப்பறிக்க கம்பஸ் வந்தால்..
பூக்கள்தான் இல்லையென்றால் பூமரமுமிங்கில்லையா ???

அதோ !!
கண்ணுக்கெட்டும் தூரத்தில் கானல் நீராய் சில பூக்கள்
கையிலேந்த  நானும்  காலடி எடுத்து சென்றால் கம்புடனே காவல்காரன்..…
கவலை வேண்டாம்  காவல் நோக்கும் எந்தப்பூக்கும்
நான் நல்ல காவல் காரன்




எதிர் பால் எங்கென்று  என் எண்ணம் தேடிட என்பால் மட்டும்   
என் கண்முன்னே எங்கெங்கும் திரள் திரளாய் ..
இங்கு பெண்ணோடு fun அடிக்க வந்தவர் எல்லாம்..
 மனம் புண்பட்டு போனதுதான் மிச்சம்……
இங்கு காதல் கண்ட நெஞ்சங்கள் உண்டு ….. விசித்திர காதல்களும் இங்குதான் உண்டு…
எத்தனை வகையுண்டு காதலிலே , அத்தனைக்குமேலுண்டு எங்கள் கம்பசிலே
பிஞ்சுக்காதல் … பிஞ்சு போன காதல்.. நடிக்கும் காதல் ,நாறிய காதல்
இரட்டைக்காதல் இரண்டான காதல்…, மறைக்கும் காதல் , மறையாக்காதல்….
மொட்டாகி பூக்காத காதல் பூத்தும் மணக்காத காதல்
செத்த காதல் .. கடைசியில் எம்மையும் சாவடிக்கும் காதல்
இத்தனை காதலும் இங்குண்டு .
இதை கண்டிடடவாவது கடவுள்
எங்கள் கம்பஸ் பக்கம் கொஞ்சம் வரவும் வேண்டும்..
கடவுளும் காதலிக்க வேண்டும்.


காதல் கொண்டிட்டால் கடவுளும் இங்கே அதைக்கட்டிக்காப்பாத்திட தெரிந்திட வேண்டும்
கட்டிய காதலன் பக்கத்தில் இருக்க மத்தவன் முத்தமிட்டிடும் கலி காலமிது..
கடவுள் ஆக இருப்பதை காட்டிலும் அவன் காவலாய் இருந்திட வேண்டும்….
ருசித்த பழமே சுவை அதிகம் என்று கூறி புசிக்கும் கூட்டங்கள். இங்கதிகம்…


கருவறையில் கல்லாய் இருக்கும் கடவுளும் - எங்கள்
கல் நெஞ்சக்காரிகளையிங்கு பார்க்க வேண்டும்.
கல்கொண்டு சிலைகண்டு நிலைகொண்ட கடவுளும்..
காதலுக்காய் கண்சிமிட்டினால்… ”வின் என்று செல்லாக
அவள் கை அடிக்கும்
ஆடவர் நம்நிலையறிந்திட கடவுளும் காதலிக்க வேண்டும்



கவிப்பேரரசை அழைத்திருந்தால் என்ன அவர் கூறிறுப்பார்…

நான் வைரமுத்து பேசுகிறேன் ….
கடவுளும் கவிஞன் ஆவான் ..அவன் கவிதையும் கதைகள் ஆகும் ….
Black lable  தீர்த்தமாகும் சிகரட்டுகள் தூபமாகும்…..
வீதியே  பஞ்சனை யாகும்அதற்கு கடவுளும் காதலிக்க வேண்டும் ..
பாவம் கடவுள் !!!!! எம்மினலும் பாவப்பட்டவர்.
அவர் நினைத்தாலும் சாகக்கூட முடியாது
அதற்கேனும் கடவுளும்காதலிக்க வேண்டும் …

கடவுளும் கதாலிக்க அட்வைஸ் கேட்டால்,  அதற்கு என்னை விட்டால் யாரும் இல்லை ….
ஆனால் ஏன் என்று தெரிய வில்லை எனக்கின்னும் அமையவில்லை….
எனக்காய் கடவுளும் மாமனாய் அழைந்தாலும் அவர் காட்டும் அவளுக்கும்  ஒரு ஆள் இருக்கும்…..
நான் சொல்லும் சொல் கேளாய் கடவுளும் இப்பூமி வந்தால்
தாடியுடன் அலைவான்  போதையிலே இந்த வீதியிலே



பிச்சாண்டியாகிட சிவனவனும்  தொப்கைள் குறைத்திட அப்பனும்
காவி தரித்திட புத்தனும் ….கோவனம் கட்டிட முருகனும்..
சிலுவையில் மாய்ந்திட யேசுவும்….மீண்டும் வேண்டின்
கடவுளும் காதலிக்க வேண்டும்


பொல்லாத பாவம் பெண்பாவம்,எனினும் பெண் செய்யும் பாவமும் பொல்லாதது
என்று உணர கடவுளும் காதலிக்க வேண்டும் …
கடைசில் எனக்கொரு ஆசை என் கவிகேட்டு … புவியாளும்
கடவுளும் காதலிக்க வேண்டும்….. என்னிலையும் புரிய வேண்டும் …

comment

LinkWithin

Related Posts with Thumbnails