Saturday, June 5, 2010

என்ன உலகம்டா.. ??

என்ன உலகம்டா இது.....
கவிதை வடித்தேன் காறித்துப்Pயது..
கதை எழுதினேன்.. கண்றாவி என்றது..
பாட்டு படித்தேன் பித்தன் என்றது....
நாடகம் நடித்தேன் நாசமாபோச்சு என்றது..

முன்னின்று உழைத்தேன் மூதேசி என்றது..
பன்ஜ் வசனம் சொன்னேன் பரதேசி என்றது...
உதவி செய்தேன்.. உதவாக்கறை என்றது..
நல்லதை செய்தேன் கெட்வன் என்றது...
கெட்டதை சொல்ல நல்லவன் என்றது..


பெண்களிடம் நட்பாய் கதைத்தேன் “வாளி ” என்றது..
குருவை மதித்தேன்.. “குழையடி ” என்றது..
நண்பனோடு நெருங்கி இருந்தேன் “நகிரினா.. தகிரினா  “கோவா” ”என்றது..
நண்பணை தள்ளி இருந்தேன்....“துரோகி ” என்றது..
பெரியோரை கீழ்படிந்தேன்.. “பம்முறான் ” என்றது..

ஏழ்மைக்கு உதவினேன்... ''நடிக்கிறான்" என்றது..
தாழ்மையிலும் சிரித்தேன்.. செருக்குபிடித்தவன் என்றது..
Addidas T-Shirt போட்டேன்.. அண்ணனின் “ஓசி ”என்றது
தலை நிமிர்ந்து நடந்தேன் தற்பெருமை என்றது.......
கம்பீரமாய் நடந்தேன்.... “உனக்கென்ன பைல்சா” என்றது.....

காதலிக்கிறேன் என்றேன்.. “காமடி பண்ணாதே” என்றது
கதை கதையா அளந்தேன் கலைஞன் என்றது..
செந்தமிழை பைந்தமிழில் வீசினேன்... கவிஞன் என்றது......
தன்மையாய் பழகினேன்... முரடன் என்றது.....
கடைசியில் ...உண்மையை சொன்னேன் வதையன் என்றது...

4 comments:

  1. nice நல்லா இருக்கு...

    சரி விடு நீயே உண்மை எல்லாத்தையும் ஒப்புக் கொள்ளுறாய் விடு, என்னத்தை சொன்னாலும் அந்த T- shirt கதை உண்மைதானே>>>>>

    ReplyDelete
  2. simply superb.........
    கம்பசில் படிக்கிறேன் என்றேன் போடா "காவாலி" என்றது ....:D

    ReplyDelete
  3. He.. He.... நன்றி நண்பர்களே.....
    எழில்... உங்களுடையதையும் .. இறுதியில் சோ்க்கிறேன்.

    ReplyDelete
  4. இதில் எதை லைக் பண்ணுவது....
    எல்லாமே நல்லா இருக்கு.....
    கெட்டதை சொல்ல நல்லவன் என்றது..
    தன்மையாய் பழகினேன்... முரடன் என்றது...
    கதை கதையா அளந்தேன் கலைஞன் என்றது..
    செந்தமிழை பைந்தமிழில் வீசினேன்... கவிஞன் என்றது......
    என்பதுவே உண்மையிலே வதையாக உள்ளது

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails