Friday, May 28, 2010

ராகிங்...

“ராகிங்” இந்த வார்த்தைய கேட்ட உடனே என்ன சும்மா அதிருதுல்ல... என்டு நான் சொல்ல வரல....அது ஒரு சுவாரஸ்யமான விசர்வருகின்ற நிகழ்வுகள் ....
முடிவா நீ இப்ப என்ன சொல்ல வர்றா என்டு தானே கேக்குறீங்க... ஏன்னா எனக்கு ராகிங் வேண்டுறது....ஜாகிங் போற மாதிரி...என்டு எனக்கு சொல்ல மட்டும் ஆசை இருக்காதா... ஆனா அது அப்பிடி இல்லங்க... உதாரணத்துக்கு ஐஸ்கிறீம்ம உங்க முன்னாடி வச்சுட்டு சாப்பிடு ஆனா.. வாயால இல்ல .. மூக்கால என்டா உங்களுக்கு எப்பிடி இருக்கும்... அதான் ராகிங்கு..ஆசை காட்டி மோசம் பண்றது...


என்னதான் யுனவர்சிட்டில ராகிங் அதுகல முற்றாக தடை செய்தாலும்.... ராகிங்க நம்மட பயபுள்ளக விட்ட மாதிரி தெரியல... அதோட அந்த நேரத்ததில கிடைக்கிற அனுபவங்கள கட்டாயம் அனுபவித்துதான் ஆகனும்... அது ஒரு தனி சுகம்...... (எப்புடி எல்லாம் பில்டப் பண்ண வேண்டி கிடக்கு...)

சரி நான் இப்ப ராகிங் என்டதுல முக்கியமா உடல் ரீதியான ராகிங்க நான் இங்கு குறிப்பிடல... ஆனால கதைச்சு கதைச்சு அறுப்பாங்களே(அதாங்க நான் உங்களுக்கு. இங்க செய்றன்) அத பற்றிதான் கதைப்பம் மன்னிக்கவும் அறுப்பம் என்டு நினைக்கிறன்...


ராகிங்ல அறுக்கிறதுல பலவகை இறுக்கு....
சிலர் கதைச்சாலே அறுவ.... இன்னும் சிலர்... நாங்க கதைக்காட்டி வதைப்பாங்க.. மொத்தத்துல சொல்லப்போன.. அது ஒரு ராகிங்க.....என்னால ராகிங்க ராகிங் என்டுதான் சொல்ல முடியும்... அதுக்கு வேற விமர்சமமே கிடையாது....
சிலர் அறுப்பாங்களே அறுவ.... தாங்க முடியாது... “டேய் நீ கதைக்கவே வேணாம் வேணும் என்டா உன்ட ரூம்முக்கு கூட்டி போய் அடிடா.... தயவு செய்து இப்பிடி மட்டும் அறுக்காத” என்டு சொல்ல தோணும்... ஆனா என்ன சீனியர் என்ட படியால அடக்கிட்டு இருக்கனும்.... (நான் வாயச் சொன்னன்...)

இன்னொரு வகை  வதைக்கிறவன் கதைக்கவே மாட்டான் ... ஆனா எங்கட கதைய நிப்பாட்ட விடமாட்டான் ... ஏதாவது கதைக்க விடுவான்.. பாட விடுவான்.... நாங்க கதைச்சு கதைச்சே எங்கட வாய் நோகும்.. செமயா களைக்கும்.... நான் இங்க தாங்க கதைச்சு களைச்சத கண்டு இருக்கன்.... எங்க தான் பிடிச்சாங்களோ இப்பிடி பட்ட  ராகிங்க... சத்தியமா சொல்றங்க.. இதுக்கு கிணத்துல விழுந்து சாகலாம் போல கிடக்கும்... இப்பதான் விளங்குது.. பல யூனிவர்சிட்டில பல தற்கொல நடக்கிறது உடல் ராகிங்கால இல்ல... இவங்கட கதையால என்டு....

சிலர் பண்ணுவாங்களே ராகிங்... சின்ன புள்ள தனமா இருக்கும்... பிறகு என்னங்க.. நட்ட நடுராத்திரில எழுப்பி எங்கள “அ” னா “ஆ” வன்னா தொடக்ம்.... நிலா நிலா ஓடிவா........  (ஏதோ பக்கத்து வீட்டுல நிலா என்ட பொண்ண ஓடிவா என்டு கூப்பிடுற மாதிரி...)
சொற்றுனை வேதியன்.... என்டு படிக்க விட்டா சின்ன புள்ளத்தனமா இல்லாம... அவங்க தாங்க சின்ன புள்ளயில அனுபவிச்ச நரக வேதனைய இப்பிடியா எங்கள வச்சு பழி வேண்டுறது.... 

அதுவும் போன் எடுத்து வதைப்பாங்கப்பா..வதையிலும் வதை அதான்......
சிலவேலை யோசிப்பம் ... அட நமக்கு லூசா... இல்ல  அவனுக்கு லூசா என்டு....அவன் என்ன செய்றான் என்டே தெரியாது... “அம்மா” என்ட வார்த்தைய 1000 தரம் சொன்னா பருவால 10 000 தரம் சொல்லுடா என்டுவான்.... அவன் எங்கள சொல்ல விட்டு அவன் தன்ட வேலையபாப்பான்...
நாங்களும் ஆர்வக்கோளாறுள 10 000 க்கு 10 010 தரம் சொல்லி நல்ல பெயர் எடுக்கலாம் என்டு நினைச்சா... அங்க உங்க நினைக்க கொண்டு போய் பனை மரத்ததுல தொங்க விடுங்க.... அப்பிடி நாங்க முடிச்ச பிறகு சொல்லுவான் நான் உன்ன 10 000 தரம் சொல்ல சொன்னான் நீ ஏன் 10 010 தரம் சொன்னி.... அதால மறுபடி 10 000 தரம் சொல்லு என்டுவான்....  என்ன இப்ப விளங்குதா யாருக்கு லூசு என்டு.....

சில பண்ணிப்பலுவ இருக்காங்க....   நடுராத்திரில நாய் எப்பிடிடா ஊளையிடும் ..  அதே மாதிரி ஊளையிடு...... கோழி எப்புடி கூவும்... மாடு எப்பிடி கத்தும்...
 என்டு எங்களுக்கு டிஸ்கவரி சனல் ஓட்டுவாங்க (இதுக்கு ஏன்டா எங்கள கூப்பிடுறீங்க நாங்க என்ன zoo ஆ நடத்துறம்..)...... நாங்க போன் கதைக்கக்குல பக்கத்துல ஒருவன் நின்னான்னு வச்சுக்குங்க..... அவனுக்கு மரை கழன்டுடும்... பிறகு என்ன.. இவன் மனுசனோட கதைகிறானா இல்ல ஆடு .. மாடு பண்ணிங்க கூட கதைக்கிறானா என்டு... டௌட் வந்துடும்... பிறகு என்னங்க. நடுராத்திரில நாய் மாதிரி ஊளையிட்டா.. சந்தேகம் வராதா பின்ன..

சில பொடியங்கள்ட அப்பா அம்மா.. சாமியார்ட்ட எல்லாம் போய் என்ட மகனுக்கு பேய் பிடிச்சுட்டு போல கிடக்கு... நடுராத்திரில ஊளையிடுறான்.. கத்துறான்.. குடையுரான் ....கொஞ்சம் திறுநீறு ஓதிக்குடுங்க என்டும் கேட்டு இருப்பாங்க...

கதைக்கிறத விட்டு.. இனி எங்கள நோண்டியாக்கி பார்த்து தாங்க சந்தோசப்படுறவங்களும் இருக்காங்க.....
நாங்களும் எங்கட சீனியர்சும்.. சும்மா பப்ளிக்ல போவம்.. போகக்குள்ள ஒருவன் சொல்லுவான் “ அதோ அங்க வர்ற குரூப்ட போய்.. விவேகானந்தர் எங்கட தாத்தா..... மகிந்த எங்கட மாமா என்டு சொல்லு” என்டுவான்..(விவேகானந்தர் எவ்வளவு பீல் பண்ணுவார் பாருங்க..)அவன் பக்கத்துல வருவான் ஆன எங்களை தெரியாத மாதிரி..... நாங்க போய் அவங்கட்ட சொன்ன இவன் விட்டுடுவான்.. ஆனா அவங்க ஏதோ இந்த பொடியன்.. ஓவரா படிச்சு தலைல கிறுக்கு பிடிச்சுட்டு......... யார் பெத்த மகனோ.. இப்பிடி பைத்தியா அலைறானே என்டு வருத்தபடுவாங்க......

நீங்க My self  பற்றி எத்தனை தாள் எழுதுவீங்க.... சும்மா யோசிச்சு பாருங்க.. குறைஞ்சது 4 பக்கம்... அதுவும் இங்கிலிசுல..... ஆனா இவங்க 20 , 30 பக்கம் எழுதிட்டு வா..அதுவும் ஒரு நாளுல... சும்மா நமக்கு இங்கிலிசு என்னடாலே..ஒன்னுக்கு போகும்..அதுல 20 பக்கம் என்டா மோசன் கூடி போகும்.. “டேய் என்ன பத்தி நான் எப்புடிடா 20 பக்கம் எழுதுறது.. அம்மா அப்பா.. அம்மம்மா தொடக்கம்.. நம்மட நாய்க்குட்டி.. நாய்க்குட்டிட அம்மா அப்பா,..நாய்க்குட்டிட தம்பி.. அக்கா , லவ்வர்.. கள்ளப்புருசன்.. ” வரை எழுதினாலும் 10 பக்கத்த தாண்டாது......


பகிடி வதை தொடரும்........................

5 comments:

  1. //நாங்களும் எங்கட சீனியர்சும்.. சும்மா பப்ளிக்ல போவம்.. போகக்குள்ள ஒருவன் சொல்லுவான் “ அதோ அங்க வர்ற குரூப்ட போய்.. விவேகானந்தர் எங்கட தாத்தா..... மகிந்த எங்கட மாமா என்டு சொல்லு” என்டுவான்..(விவேகானந்தர் எவ்வளவு பீல் பண்ணுவார் பாருங்க..)//super (மகிந்த அதை பற்றி ஃபீல் பண்ண மாட்டார் எண்டு சொல்ல வாரது பிடிச்சிருக்கு )


    //“டேய் என்ன பத்தி நான் எப்புடிடா 20 பக்கம் எழுதுறது.. அம்மா அப்பா.. அம்மம்மா தொடக்கம்.. நம்மட நாய்க்குட்டி.. நாய்க்குட்டிட அம்மா அப்பா,..நாய்க்குட்டிட தம்பி.. அக்கா , லவ்வர்.. கள்ளப்புருசன்.. ” வரை எழுதினாலும் 10 பக்கத்த தாண்டாது.//

    ReplyDelete
  2. எல்லாம் ஓகே..ஆனா எங்கயோ இடிக்குதே...இதெல்லாம் நீர் வாங்கின போலத் தெரியுது...ஹிஹிஹி

    அது சரி...இதை விடவும் மோசமா பத்தும் பலதும் கிடக்குது...எழுத ஏலாது என்டு பாக்கிறம்...இல்லேன்னா, 10 , 20 பக்கம் என்ன புத்தகம் புத்தகமா எழுதினாலும் எங்கன்ட சோகக்கதை தீராது அண்ணை....

    ஆஹ்...இன்னொன்னு அண்ணையின்ட அண்ணை செய்த உதவிகளையும் மறக்க முடியாது தானே...அதப் பத்தி எப்போ எழுதப் போறேள்....

    ReplyDelete
  3. அது என்டா உண்மைதான் தம்பி......
    நாம வாங்காததா....
    எல்லாம் நன்மைக்குத்தான் தம்பி...

    ReplyDelete
  4. ஹா ஹா....
    இரசித்தேன்...
    சிலவேளைகளில் வேதனைகளை சிலர் மற்றவர் மகிழும்படி சொல்வார்கள், அருமையாக எழுதியிருக்கிறீர்கள்....

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails