Monday, June 11, 2012

நான் நினைத்த நான்

நான் நினைத்த நான்



நினைத்ததெ்லாம் நினைத்து பார்க்கிறேன்
நிஜமாய் ஒன்றும் நினைவில் இல்லை
நினைவில் உள்ள நினைவுகள் மட்டும்
நிழலாய் என்னை தொடர்கிறது
நினைத்ததெல்லாம் நிஜமாய் போனால்,
நினைவுகள் எல்லாம் கனவாய் போய்டும்.
நினைவுகள் எல்லாம் கனவாய் போனபின்
கனவு என்பதே நிஜமாய் ஆனது.
நினைத்த பல்கலை பாடம் சொன்னது.
நினைத்த காதல் தூரல் ஆனது,
சில தூரலானது காதல் ஆனது.
நினைதத நட்பு கற்பை இழந்தது,
அணைத்த நட்பு அருகில் இருந்தது.
நினைத்த வாழ்ககை நாறிப்போனது, 
நான் நினைத்த நானே நானாக இல்லை
நினைத்த உலகம் நிஜமாகும் என்று
நினைத்து நினைத்து நினைவாய் வாழ்கிறேன்.

comment

LinkWithin

Related Posts with Thumbnails