Monday, February 13, 2012

அன்னை மடி (கவியரங்கக்கவிதை)


தனி இரவில் சிந்தித்தேன்
கலைமகளை பூசித்தேன்
பொங்கியது சங்கத்தேன் - இங்கே
தங்கத்தேன் குடிப்போர் முன்
என் கவி சொல்ல வந்தேன் 
எப்படியோ நான் இனி தப்பித்தேன்.

கற்கண்டு சொற்கொண்டு கவி பாடும் கலைஞர்கள் முன்
  ”நெற்பதர் நான்” அன்னை மடி பற்றி பாடுவதோ ????
நான் கவி பாட என் அதரம் திறக்கையிலே - இங்கு
  பலர் செவி கிழிந்து உதிரம் கொட்டாதவரைக்கும் முயற்சிக்கிறேன்...

கரு உண்டா பொருள் உண்டா ஒரு மண்ணும் விளங்காமல்
எண்ணம் கொண்டதை பாடுகிறேன் கவிக்கோவே !!
நான் பாடும் கவியை நானே அறியேன் பெருங்கவியே !!
என் கவியின் கூன் உண்டோ ? ஆய்ந்து கூறும்.

எந்த மடி இன்பம் என்று
இந்தன் மடி தேடி வந்தேன்
நான் இந்தன் இடம் கண்டதெல்லாம்
 காதல் மடி , அது முழுதும் காமமடி.....

அனுபவம் அற்றவனாய் தான் கேக்குறேன் !
நீ கன்னி மடி கண்டதுண்டோ ?
காதல் வெறி கொண்ட துண்டோ ?
காதலிடம் வீழ்ந்ததுண்டோ ??
காதலியின் மடியில் சாய்ந்ததுண்டோ ?? - கடைசியில்
கன்னத்தில் அடி வாங்கியது உண்டோ ???

உங்கள் கேள்வி புரிகிறது....

இதைக்கேக்க நீ யாரடா ? ....................................................

பல்கலை ஒழுங்காய் வந்தாயா ?? கன்னியரை கண்ணடித்தாயா ??
இங்கு வரும் juniors  பெண்களுக்குதான் குப்பி போட்டாயா ??
வாளி வைத்தாயா ? நீ என்ன வல்லவனா இல்லை மன்மதனா ??
நாசமாய் போனவனே !! உனக்கு ஏனடா இந்தக்கேள்வி ??

சொல்கிறேன் !!! என் விடையை சொல்கிறேன்....................................................

யாழினிது !  தேனினிது ! பால் இனிது என்பர்
தன் பிள்ளை மழலைச்சொல் கேளாதவர் !! - அது அன்று
இன்று காதலியின் முடி புனிது அவள் மடி இனிது என்பர்
தன் அன்னை மடி சாயாதவர் !!!

தாய் மடியில் தலைவைத்து கண் திறந்து 
நிலவு முகம் ரசித்ததுண்டோ !!!!!
5ம் வயதினிலே அப்பா அடிக்க துரத்துகையிலே
தஞ்சமென தாய் மடியை தாவிப்பிடித்ததுண்டா !!
அண்ணன் , தங்கை ,தம்பியுடன் போட்டி இட்டு
அன்மை மடியில் இடங்கேட்டு இட ஒதுக்கீடு பெற்றதுண்டோ ??

சோதனைகள் வந்த போது வேதனையின் வலியை
மனம் தாங்க மறுத்த போது ......
அன்னை மடி மீது முகம் உள்புதைத்து
உன் மனம் விட்டு குமிறி அழுததுண்டா ??

குட்டி மழையில் சொட்டாய் நனைய
எட்டிப்பிடித்து தலையில் குட்டிக்கொண்டே - மழையை திட்டி
என்தலையை துவட்டி , தன்மடியில் சாய்த்து
  நெற்றி நடுவில் முத்தமழை பெற்றதுண்டோ !!
இந்த சுகம் வேறு எங்கும் கண்டதுண்டோ ????

பஞ்சனை மெத்தைகளிலே படுப்பது சுகமோ ??
இல்லை காதலியின் நெஞ்சனை தாங்குவது சுகமோ ???
அல்ல மனைவியின் முந்தானை முகர்வினில் தான் மொத்த சுகம் கண்டதுண்டோ ??
ஆயிரம் சுகம் கண்டாலும் பல்லாயிரம் படி மேலையடி அது உந்தன் அன்மை மடி !!


5 மாதத்திலே தாயின் மடி தாலாட்டும் மஞ்சையடி!
5வயதினிலே சீராட்டும் சின்ன மடி!
துன்பம் வருகையிலே இன்பம் தந்த இனிய மடி!
பயம் கொண்டு வெருண்ட வேளை துணிவு தந்த வீர மடி!
சோர்ந்த வேளைகளிலே தெம்பைத்தந்த தெளிந்த மடி !
தோல்வி வரும் போது தோல் கொடுத்த தோழன் மடி!
அண்டமே அழிந்தாலும் அரவணைக்கும் எந்தன் அன்னை மடி !!

அடிக்கடி எனக்கு தலைவலி வர வேண்டும் !
என் தாய் தன் மடி தர வேண்டும் !
தாய் தன் கரம் கொண்டு என் சிரம் தொட வேண்டும் !!
தொட்டவுடன் வலி துாரம் ஓடிப்போக வேண்டும் !

இதற்கு மேல் எனக்கென்ன வரம் வேண்டும் ................................................................. ???

இன்னும் ஒன்று வேண்டும் .......................................................
என்னோடு தாய் என்றும் வேண்டும் ....
என் வாழ்வின் எல்லை வரை வேண்டும்
முதலில் என்உயிர் பிரிய வேண்டும்...
அதுவும் எந்தன் அன்னை மடியில் பிரிய வேண்டும்.....


இப்போது நான் உங்களை விட்டு பிரிய வேண்டும் ..........

comment

LinkWithin

Related Posts with Thumbnails