Friday, April 29, 2011

கம்பஸ்

"கம்பஸ்”  ஆம்....அனைவருக்கும் பிடித்த வார்த்ததை... எனக்கும் தாங்க......... இப்ப இல்ல சின்னன்ல ...




சின்ன வயசுல இருந்து எனக்கு ஏதாவது( இத கொஞ்சம் நோட் பண்ணுங்க ..) கம்பசுக்கு போகனும் என்டு ஆசை.. ஏன் என்டா கம்பசுல படிக்கிறவங்களுக்கு எங்க ஊருல தனி மரியாதை... ஏன் என்டா அவங்க கம்பஸ் போனாத்தானே...!! நல்ல காலம் அவங்க கம்பஸ் வரல !! இத வச்சுத்தான்  என்ட ஊருல நம்மட பிழைப்பே ஓடுது ....... கம்பசுல இருந்து ஊருக்கு போன இருக்கிற மதிப்பே தனி... எங்களுக்கு என்டு ஒரு பந்தா...... கம்பசுல விக்கிற 600 ரூபா டி சேர்ட் எல்லாத்தையும் வாங்கி கொண்டு ஊருக்கு போறது...  ஏன் என்டா .எங்கட வண்டவாளம் தொடக்கம் தண்டவாளம் வரை கம்பசு பப்பறப்பே என்டு கிழிஞ்சு தோலா தொங்குது..... நாறா நாறுது.... இதால ஊருக்கு கொண்டு போய்தான் நாங்க கம்பஸ்  டீ-சோ்ட எல்லாம் போடுறனாங்கள்... போட்டுட்டு....“இங்க பாத்துக்கொள்ளுங்க... நானும் கம்பஸ் தான்..... நானும் கம்பசுலதான் படிக்கிறன்... ”(வடிவேலின் பாணியில்) என்டு பீத்திகிட்டு திரிற.... அது மட்டுமா... ஊருல சக பொம்பலகள கண்டா கம்பஸ் டீ சேர்ட்ட விரிச்சுகாட்டுற..... கம்பஸ் பேனையாலஎழுதி காட்டுறது..... கம்பஸ் file ஐ திறந்து காட்டுறது...... இவங்கட அட்டகாசம் தாங்க முடியலங்க....
அம்மாவும் ஏதோ பிள்ள தாங்க படிக்காத படிப்பெல்லாம் படிச்சுட்டு வந்துட்டான்... என்டு... ராஜ கவனிப்பு.... அந்த கவனிப்பெல்லாம் அனுபவிக்கக்குள்ளத்தான் சிரிப்பு வரும்....(அப்பிடியே எங்கட கம்பஸ்ல லெக்சர் கிழிக்கிற சீன் Mind டுக்குள்ள ஓடும் ...) நாங்க படிக்கிற எப்புடி என்டு அம்மாக்கு தெரியவந்தா பிழைப்பு சிரிப்பா சிரிக்கும் என்டு....


ஊர்கதைய விடுங்க கம்பஸ் கதைக்கு வாங்க .....
ஒவ்வொரு கம்பசும் ஒவ்வொரு மாதிரிங்க....  ஒவ்வொரு கம்பசுக்கு கம்மபஸ் கோட் வேர்ட்(code word) இருக்கு...குப்பி , குத்து , A.K ,வாளி , சரக்கு , சினா , விசிறி,பாடம் கைல , வதை ,  என்னடா ஒன்னுமே விளங்குதுல்ல என்டு பாக்கிறீங்களா... அதாங்க கோர்ட் வேர்ட்... இந்த வேர்டுகள வச்சு கதைக்ககுள்ள.... மத்தவங்களுக்கு ஒன்டு ஒன்னுமே புரியாது.... இல்லாட்டி வேற மாதிரி புரியும். “மச்சான் அவன் மாட்டு குத்து குத்துறான்டா.....”என்டா கேக்கிறவனுக்கு ஒரு சூனியமும் விளங்காது.... அப்பிடின்னா .. அவன் கடுமையா படிக்கிறான் என்டு அர்த்தம்.. இப்ப விளங்குதா....

அப்பிடித்தான் .. மச்சான் பாடம் கைல என்டா ... மட்டவங்க நினைப்பாங்க .. அவன் பாடத்துல A எடுத்த பெரிய கில்லாடி என்டு .. ஆனா ... இங்க அவனுக்கு A  கால விரிச்சுட்டு    F  என்டு நிக்கும் .. அதுக்கு பெயர்தான் பாடத்தை கைல வாங்குறது ...


இதுலயே பெரிய famous  ஆனது வாளி தாங்க ....  இதுக்கு ஊருல ஒவ்வொருவன் ஒவ்வொரு பெயர் வச்சுருப்பான் ..  குழையடிக்கிறது .... பொம்பள பிள்ளைகளுக்கு பின்னால வழியுறது..... Butter  பூசுறது ... வால்பிடிக்கிறது .. ஆனா நம்மட கம்பசுல அதுக்கு பெயர் “வாளி வைக்கிறது..” எந்த அறுந்த புண்ணியவான் இப்பிடி பெயர் வைச்சானோ தெரியல .. இல்ல ஏன் வச்சானே தெரியல ....

இப்பிடி ஊருப்பட்டது கிடக்குங்க ....

ஆனா ஒன்டு ... ( கிளைமக்ஸ் .... அதாங்க  அறுவை நேரம்) ஒரு மனுசன்ட வாழ்கையில எவ்வளவு காலம் வந்தாலும் . கம்பஸ் வாழ்கை வாழ குடுத்து வச்சிருக்கனும் .... ஏன் என்டா அப்பதான் அவன் அம்மா அப்பா ட பிடியில் இருந்து விலகி.. உலகத்த தன்னந்தனியே சந்திக்கறான் ... அப்பதான் அவன பத்தியே அவனுக்கு தெரியுது .. அவன் பலதுகள அனுவபிக்கறான் ... பட்டு திருந்துறான் .... அப்பதான் அவன் எதிர்காலத்துல வெற்றிளாளனா  வாழமுடியும் ...

அவனவன் கம்பஸ் அவனுக்கு பெரிசு.... என்ட கம்பசும் எனக்கு பெரிசுதான் ...

comment

LinkWithin

Related Posts with Thumbnails