Friday, January 21, 2011

நான் நினைச்ச கம்பஸ்

மன்மதன் அம்பு படத்தின் கமலின் கவிதை பாணியா இதை வாசிச்சிங்கட்டா..... நல்லாப்போகும்.... நான் கவிதையச்சொன்னன்....



 எனக்கு மட்டும் வேண்டும்....

பல்கலை செல்கையில் கையை பிடித்து.
காதோடு காது ரகசியம் பேசி....
 கடுப்பை கிளர பிகர் ஒன்டுவேண்டும்.....


காலையில் எழுந்தவுடன் உடனே

குளிக்கும் நாத்தம் இல்லா ரூம்மேட் வேண்டும்.
உடுப்பும் அடிக்கடி கழுவிட வேண்டும்..
ரூம்மையும் கூட்டி பெருக்கிடவேண்டும்..
சொக்ஸ் ஐயும் எப்பயாவுது கழுவிட வேண்டும்....


கடுப்பை கிளரி அடிக்கடி மோதி...

லீவு கிடைக்க சண்டைகள் நடந்திட வேண்டும்
நான் விடும் பீலா அனைத்தையும் கேட்டு
கைகொட்டி சிரிக்கும் கேனைகள் வேண்டும்..

ஒருநாள் பாடம் .... ஒரு நாள் படம்...
என இனிய பொழுதுகள் கழிந்திட வேண்டும்...
கடுமையா குத்தி ....... குப்பியும் போட்டோர்க்கு....
கையில் பாடம் வந்திட வேண்டும்.....
எனக்கு மட்டும் A+  தந்திட வேண்டும்...


இப்படியான கம்பஸ் போக வேண்டும்  என நான்

புத்தகத்தோடு கனவில் மிதந்தேன்....
வரந்தருவார்  என் Vice chancellor என
கனவு கலையாமல் கம்பசுக்கு போனேன்..


ஊர் Friend ஒருவன் - தேடி எங்க போனீ ???
நான்: வேற எங்க எங்கட கட்டுபத்தை .. மொரட்டுவ கம்பசுக்குத்தான்..

பொடி நடை உடையுடன் இடை மெலியவென 

கம்பஸ்  தோறும் ஜீன்சும் Shorts  உம் என்
மொக்கை பிகருகள் திரிவது கண்டேன்.

கேவலம் கெட்டட கேனையன்களுடன்....
செம ஆத்தல் பிகருகள் திரிவது கண்டேன்....


ஊர் Friend ஒருவன் - உன்னோடயா மச்சான்.....
நான்: கடுப்ப கிளறாம சொல்றத கேளு....


சப்பை பிகரும் சக்க பிகராவது எங்கள் 
கம்பசில் தான் உண்டு அல்லோ !!!!எங்கள் Batch  இல் அறவே இல்லை..
சப்ப இல்லாட்டியும் சுமார் என்றாவது கூட

Juniors  பக்கம்டி தலை எட்டி பார்த்தேன்..
எட்டிப்பார்க்க முன்னே அண்ணா  என்றனர்
எக்குலமானால் என்ன என்று
சி” பிள்ளைகள் வரை தேடி போனேன்
வரவர தமிழர்கள் Culture உள்ளவர்

கம்பஸ் பெண்களில் மிகமிக குறைவு

எனக்கு முன்னே என்டர் ஆன சீனியர் அண்ணே...

உங்களுக்கு ஐடம் அமைந்தது எப்புடி... ??
நீங்கள் நினைத்த ஐடம் அமைய நீங்கள் 
செய்த கூத்துக்கள் என்ன......??? 
நேற்று கழட்டிய உங்கள் ஐடத்தை
மட்ட சீனியர் அமைத்தது எப்புடி..?

கம்பஸ் இல் சொல்லும் அத்தனை கூத்தும்.
உண்மையாக நடப்பது உண்டோ?
அங்கையும் இங்கையும் எங்கையும் சிக்கா
 Fresh  ஆன ஐடம்(Item) யார்குமுண்டோ ?

எனக்கேனுமது அமையபெற்றால்
உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலிதான்
நினைப்பது போல்  எனக்கும் அமையசெய்யேன்
Vice Chancellor அவரே  நமஸ்துதி......

Monday, January 17, 2011

நாங்களும் ரௌடிதான்........

நாங்களும் ரௌடிதான்



நாங்களும் ரௌடிதான்  ....  

என்னடா இவன் ஒருத்தனா இருந்து கொண்டு..... நாங்க ......நாங்க என்டு சொல்றான் என்டு கேக்குறீங்களா ... அதாங்க .....வெளில தெரியிரது ஒரு உருவம் ஆனா உள்ளுக்க இருக்கிறது பல ரூபம்.. வெளில விட்ட இந்த வெப்சைட்டுகள் தாங்காது என்டு ஓரமா குப்பற படுக்க போட்டுருக்ம்.. அதுல இருந்த ஒன்டத்தான் சிலபேர் சொறிஞ்சு விட்டு சுப்பர் ஸ்டார் ஆக்கிட்டாங்கள்.....  :P
ரௌடிகள் முளைப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் ஆனா எங்கட கேசே வேறங்க......வழமையா ரௌடி என்டா எப்பவும் சண்ட பிடிப்பாங்க.... ஆனா பாருங்க.. நாங்க  சாதாரண ரௌடி இல்ல மிகப்பெரிய ரௌடி என்டு காட்டத்தான் எப்பயாச்சும் சண்டை பிடிப்பம்.....எப்ப ரௌடியா இருப்பம் எப்ப ஸ்டுடன்டா இருப்பம் என்டு எங்களுக்கே தெரியாது......

அதாங்க எனக்கும் புரில .. எப்புடித்தான் எங்கட கம்பசுல சண்டைய கிளப்புறாங்க என்டே தெரியல .. ஆனா கிளப்புறாங்க... வருஷா வருஷம் கோயில் திருவிழா நடக்கிற மாதிரி...எங்க கம்பசுலயும் ஏதாச்சும் சண்டை வந்துடும்... நானும் கம்பஸ் என்ட பண்ணின உடனே சண்டைய பாக்கனும பாக்கனும் என்டா சான்சே கிடைக்லங்க..... கடைசியா ஒருக்கா கிடச்சுது.... அது வந்து NDT 1st year க்கும் NDT 2nd years  க்கும் நடந்த சண்டை அது பெரிய சண்டை இல்ல .. சும்மா லொ லொ லொலா சண்டை

ஆனா இப்ப நடந்துச்சே சண்டை அதாங்க சும்மா அனல் பறக்க...... சும்மா தூள் பறக்க நடக்காட்டியும் ...
போத்தல் பறக்க .. கல் பறக்க .... வேற தட்டு முட்டு சாமான்கள் flying ல clashing பண்ண .... students  மண்டையில  bleeding பண்ண ....Police waring பண்ண ... இவங்க police க்கு கண்ண விரல விட்டு turning பண்ண  கடைசில கம்பச closing பண்ணி்ட்டாங்க ... அதுக்கு கம்பசு எங்களுக்கு இனித்தான் வைப்பாங்க பாரு ஆப்பு..... புடுங்குறதுக்கே கனநாள் ஆகும் போல கிடக்கு....

சரி என்ன நடந்துச்சு என்டு சொல்லுறன் வாங்க...
இந்த சண்டைக்கு மூல காரணமே poster  ஒன்டு தாங்க .. அத ஒருவன் கிழிச்சதால வந்த பிரச்சனைதாங்க இது.....
என்னடா ஒரு  Poster க்கு இப்பிடி ஒரு சண்டையா ..... ?? என்டுறீங்களா... அதாங்க நாங்க... சண்டை பிடிக்கிற என்டு முடிவு கட்டிட்டம்... போஸ்டர என்ன .. எங்கட சட்டைக்கூடி கிழிப்பம்.. கிழிச்சு போட்டு அவன்தான் கிழிச்சான் என்டும் சொல்லுவன்... அதுக்கு பிறகு சண்டையும் பிடிப்பம்...  சண்டை பிடிச்சு போட்டு கம்மென்டு அமுக்கமா இருப்பம்... அதான் சொன்னனே.. நாங்க எப்ப சண்டை பிடிப்பம் என்டு எங்களுக்கே தெரியாது..... இப்பிடி poster ஆல வளந்த சண்டைய.... உரம் .. கல்லு போட்டு ... சோடா போட்டு என்டு... கஷ்டப்பட்டு வளத்து ஒருமாதிரி 2 மாசத்துக்கு கம்பச பூட்டுற அளவுக்கு மெகாஹிட் ஆக்கிட்டம் .... நாங்க பிடிச்சா சும்மா சின்ன சின்ன பட்ஜெட்ல சண்டை பிடிக்கிற இல்ல .. சங்கர்ட படம் மாதரி .. பெரிய பிரணமாண்டம் and .. மெகா பட்ஜெட் ... அதாங்க .. எங்க சண்டைட செலவு மாத்திரம் என்ன என்டு  பாத்தீங்க என்டா.......


இது தாங்க சம்பவ இடம்..

.
.
...
.... என்ன பாத்துட்டீங்களா ??


இல்லப்பா ..... அம்புட்டு செலவாம் ஆனா யார் தான் Producer யார் என்டுதான் தெரியல..... இன்னும் செலவ  கனக்கு பண்ணி கொண்டு இருக்காங்க நாங்கதான எல்லாத்தையும பிரிச்சு மேய்ஞ்சுட்டம் அல்ல... இனி அவங்க எங்கள பிரச்சு மேய்வாங்க... but ..கிட்டடில  தெரிய வரும்.... ஆனா எங்க MEGA  பட்ஜெட் என்ன என்ன என்டு கேளுங்களேன்....  நாங்க யாரு..... காருகள்.. கார் கண்ணாடிகள்.. building கண்ணாடிகள்.... benches .. கொங்ரிட் benches  கமரா.. செல்போன்கள் என்டு என்னில் அடங்காதவை..

இது பல கட்டமா நடந்த சண்டையாம் எனக்கு தெரியாதப்பா..... 2 நாட்கள்..
ஒரு நாள் இரவு .. மட்டும் மறு நாள் பகல்...
முதல் நாள் இரவுதான் அந்த கேவலம் கெட்ட ஆரம்பம்.... அப்ப அவங்க எங்களுக்கு அடிக்க .. நாங்க அவங்கட்ட அடிவாங்க .. மறுபடியும் அவங்க எங்கள அடிக்க... என்டு போச்சு.... என்ன என்டு கேக்குறிங்களா... சும்மா போங்க தம்பி போங்க... கம்பசுல வந்து கேட்டு பாருங்க நாங்க அடிவாங்காத ஆக்களே கிடையாது...எவ்வளவு அடிவாங்கினாலும் சத்தமும் வராது ஓடினதும் கிடையாது...... அதாங்க எங்கட ஸ்பெசாலிட்டியே.. இதுதான் அவங்களுக்கு எங்கள்ல ரொம்ப பிடிச்சது....

ஆனா அடுத்த நாள் விடுவமா நாங்க.. சும்மா கிளம்பினமுள்ள .....  அப்ப நடந்தது தான் மகா மானங்கெட்ட .. கேவலங்கெட்ட அந்த சண்டை.... நாங்கெல்லாம் சண்டை எண்டா நேருக்கு நேர் பிடிக்க மாட்டம்.. Throwing and blocking thaan..  அதுலு அடிவாங்கினது ஆக்கள் இல்ல என்டாலும்.. கம்பஸ் காருகள் .. பில்டிங்கள் என்டு . சும்மா ரகளையாக்கிட்டாங்க. சண்டைல பெரிய பிளானிங் எல்லாம் போட்டாங்களாலம்... வீரபாண்டிய கட்ட பொம்மன் கூடி சண்டைக்கு இப்பிடி வியூகம் அமைச்சிருக்கமாட்டாரு...  blocking க்கு 20 போராம்... கல்லு போத்தல் எறிய 40 பேறாம்.. அங்கால .. கல்லு போத்தல் சப்பளையர்ஸ்க்கு கொஞ்ச பேர்.. எதிரிட பக்கம் போய். அவங்கட சாமான கடாசிட்டு வற கொஞ்சப்போ் என்டு .. பெரிய எதிர்கால திட்டம்.. இதுக்கு use பண்ணின மூளைய படிப்புள use பண்ணில.. எங்கட கம்பஸ் international level ல first  ஆ வந்துருக்கும்.... கடசில பொலிசும் லெக்சரும் பூந்து தடுத்துட்டாங்களாம்........ பிறகு என்ன கம்பச மூடிட்டாங்க... அவனவன் அவனவன்ட வீட்ட போய்ட்டான்... நான் இங்க வீட்ட கிடந்து இத எழுத வேண்டி கிடக்கு....

இதுல நான் ஒன்ட சொல்லவே இல்ல பாருங்க...
.
.
.
.

அதாங்க நான் இந்த சண்ட நடந்தப்ப... நான் spot  ல இல்ல...
விளங்குதுங்க.. என்னடா நீ ஓடிருப்பா என்டத ..என்ட மைண்ட VOICE  கட்ச் பண்ணிட்டு... ஆனா அப்புடித்தாங்க நடந்துச்சு...... நான் ஓடித்தாங்க போய்ட்டன்... பிறகு யாரு DISMISS பண்ணு படுறது......

நாங்க பில்டப் பண்றோமோ பீலா விடுறமோ அது முக்கியம் இல்ல.. நாம எது பண்ணாலும் உலகம் நம்மல உத்துபாக்கனும்... நாதரிதனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்..ஆனா நாம பண்றது நாலு பேருக்கு புரியப்படாது தெரியப்படாது.... அதாங்க நான் ...

comment

LinkWithin

Related Posts with Thumbnails