Friday, August 6, 2010

வாளி

என்னடா இவன்... திடீர் என்டு வாளி , கயிறு, கிணறு என்டு கதைக்கப்போறன் என்டு பாக்கிறீங்களா ????  அதெல்லாம் ஒன்னுமில்ல.... நம்மட கம்பசுல வாளி வைக்கிறது எவ்வளவு ரீச் ஆகி இருக்கி.... நம்மட யூனியர்ஸ அது எவ்வளவு பாதிச்சு இருக்கு... என்டு அறிய அவர்களின் அறிக்கைகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்த போது.. பல விசித்திரமான் பதில்கள்.... வினோதமான் எண்ணங்கள் எழுந்தன......

இதோ அவர்களின எண்ணங்கள் சிறிதும் மாற்றம் இன்றி... ஒவ்வொருவரதும்  எண்ணங்கள்......

கனிஷ்ட மாணவர்கள் இது பற்றி தெரிவிக்கையில்

இன்றய 21 ம் நூற்றாண்டின் இயந்திரமயமான வாழ்க்கையில் “வாளி வைத்தல்” என்பது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்த ஒன்றாகி விட்டது. எங்கு பார்த்தாலும் வாளி வைத்தல் வாளி் வைத்தல் என்று சொன்னால் அது மிகையாகாது. வாளி வைத்தல் எனும் வார்த்தை சற்றே பிரபல்யமாகாது இருப்பினும் அதனைக கைக்கொள்ளாதவர் அநேகமாக நம்மில் யாருமில்லை. சரி ! இனி வாளி வைத்தல் என்றால் என்ன ??

    யாதேனும் ஒருவர் தமது காரியம் நிறைவேறும் பொருட்டு இன்னொருவருக்கு இல்லாத தகைமைகளைக் கூறி, பல உதவிகள் புரிந்து , வெகுமதிகள் அளித்து அவருடன் நட்பாக இருத்தல் அல்லது நட்பாக இருப்பது போல் நடித்தல் வாளி வைத்தல் எனப்படும். அப்படி இந்த வாளி வைப்பதனால் ஏற்படும் நன்மைகள் யாவை ??

எண்ணில் அடங்காதவை.. வீட்டிலும் . பாடசாலையிலும் , பல்கலைக்கழகத்திலும், வீதியிலும் , கடையிலும், வியாபாரத்திலும், அரசியலிலும் வாளி வைத்தல் அளப்பெரிய நன்மைகள் உண்டாக்கின்றன. பாடசாலையைப் பொறுத்த வரை ஓர் ஆசிரியருக்கு வாளி வைப்பதினால் அவ் ஆசிரியரிடம் நல்ல பெயரைப் பெறலாம். அவ ஆசிரியரிடம் இருந்து விஷேட கவனிப்பு , உதவிகள் , கிடைக்கப்பெறலாம் , மிக முக்கியமாக பரீட்சையில் அப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். கடைகளில் வாளி வைப்பதால் ஓர் பொருளை உரிய விலையினை விட மலிவான விலையில் பெற்றுக்கொள்ளலாம். பல்கலைக்கழகத்தில் வாளி வைப்பதால் சிரேஷ்ட மாணவர்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம். அவர்களின் உதவிகளை ஆலோசனைகளைப்பெறலாம். அதைவிட முக்கியமானது இன்று பெண்களிடம் ஆண்கள் வாளி வைத்தால் மட்டுமே அவர்களின் நட்பை  இலகுவில் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. வாளி வைக்கும் ஆண்களுக்கு தான் அதிகப்படியான பெண்நண்பர்கள் காணப்படுகின்றனர். இப்படி வாளி வைத்தலின் பயன் பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 


எனினும் அளவுக்கு மீறி வாளி வைப்பதினால் சில பிரச்சனைகளும்  உருவாகின்றன. உதாரணமாக பெண்களுக்கு வாளி வைப்பதினால் ஆண் நண்பர்களின் விரோதத்தை எதிர் நோக்க வேண்டி இருக்கிறது. ஆசிரியருக்கு வாளி வைத்தலினால் சக மாணவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். எனவே இப்பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு வேண்டிய நேரத்தில் 

அளவோடு வாளி வைத்து வாழ்வில் வளம் பெறுவோம்...


அடுத்தவர்களின் கருத்துக்கள் வெகு விரைவில்..........................................

comment

LinkWithin

Related Posts with Thumbnails