Thursday, December 23, 2010

பிஞ்சு மனதும் நஞ்சு உள்ளமும்...

இது சீரியசான உண்மையுங்க... நடந்தது...... (கொஞ்சம் சீரியஸ்.....)

சேஷிகன்.. அவனது பிஞ்சு உள்ளமும் எழில் கொஞ்சும் வதனமும்... சுட்டிக்குறும்பும்... அவனது அடையாளங்கள்.அவன் 5ம் ஆண்டு வகுப்பு படிக்கும் மாணவன்,கெட்டிக்காரனும் கூட (கதையின் கதாநாயகன் ஆச்சே...) அவனுக்கு டீ.வீ பார்ப்பது என்றால் ரொம்பப்பிடிக்கும்....

ஒரு நாள் அவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய  அவன் வழமை போல் இல்லை முகங்கள் சிவந்து வீங்கி இருந்தது....  ததும்பிய கண்ணீர், கண்விழிம்பில் நின்று நிலத்தினை பார்த்து பயந்த வண்ணம் நடுங்கி கொண்டு இருந்தது.....  அவன் மூக்கினில் காற்று செல்ல தடுமாறியது..... அவனது அம்மா அவனை கண்டது.. மிரண்டு போனார்..  என்னடா நடந்தது.. ????

யாரோடையும் சண்டை போட்டியா ???      ”இல்லம்மா” அவன் பதில்..

ஏதாவது குழப்படி செய்தியா ???                     ”நான் செய்றல்லம்மா...”

அப்ப என்னதான் பண்ணி தொலச்சா ???   நான் ஒன்டும் செய்யல ஆனா டீச்சர் என்ன போட்டு அடிச்சுட்டா...

அடுத்த நாள் அம்மா அவனையும் கூட்டிட்டு டீச்சர்ட்ட போய்ட்டா.....
“என்ன டீச்சர் நடந்துச்சு”.... அவன்ட அம்மா...
என்னங்க உங்க மகன் வயதுக்கு ஏற்ற மாதிரியா கதைக்குறான்.. என்ன நடந்த என்டு அவன்ட வாயாலயே கேளுங்க....

என்னடா நடந்துச்சு .???





  என்ட பிரண்டு காயத்திரியை பாத்து  “I LOVE GAAJATHIRI ” என்டு தான் சொன்னான்..

பாத்திங்களா ??? உங்க பிள்ளைய....


ஏன்டா அப்பிடி சொன்னா ???       அவங்க அம்மா!!!

ஏன் அம்மா எனக்கு காயத்திரிய ரொம்ப பிடிக்கும்.... T.V la  எல்லாம்  I love my Mummy ..... I love My Daddy ...I love Apple Jam  .... என்டு எல்லாம் தங்களுக்கு பிடிச்சத பாத்து  சொல்றாங்க.....   அதான் நானும் காயத்திரிய பாத்து சொன்னன்...  Love  என்டா அப்பிடி என்ன கெட்ட வார்த்தையா ???

ஒரு கனம் அவன் கண்களில் இருந்த கண்ணீர் துளி ..Teacher இன் கண்ணிற்கு இடமாறியது.....
அப்போதுதான் புரிந்தது.. பிள்ளைகள் பிஞ்சு நெஞ்சு உடையவர்கள் மட்டும் இல்ல.. நஞ்சில்லா  மனமும் உடையர்கள் என்டு.....

“வாறியா சேஷிகன் விளையாடுவம்”   தூரத்தே காயத்திரியின் குரல்... புன்சிரிப்புடன்..  அவன் துள்ளிச்சென்றான்.....

comment

LinkWithin

Related Posts with Thumbnails